லெமன் கேக்

தேவையான பொருட்கள்:

மைதா மாவு – 2 கப்
சர்க்கரை – 3 கப்
பால் – 1 கப்
நெய் – 1 கப்
ஆரஞ்சு அல்லது லெமன் கலர் – 1 சிட்டிகை
எலுமிச்சம் பழம் – 5
முந்திரி பருப்பு – 10
ஏலக்காய் தூள் – 1 சிட்டிகை
வெனிலா எசன்ஸ் – 1 தேக்கரண்டி

செய்முறை :

மைதா மாவில் சிறிது நெய் கலந்து, பச்சை வாசனை போகும் வரை பொன்னிறமாக வறுத்து ஆற வைக்கவும். அதில் பால் ஊற்றி கட்டிகள் இல்லாமல் நன்றாகக் கரைத்துக் கொள்ளவும்.எலுமிச்சம் பழத்தில் இருக்கும் விதைகளை நீக்கி விட்டு, பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் இரண்டு தேக்கரண்டி நெய் ஊற்றி சூடானதும், நறுக்கிய எலுமிச்சம் பழத்தைப் போட்டு நன்றாக வதக்கவும். பிறகு அதை ஆற வைத்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.அடிப்பக்கம் கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் சிறிது தண்ணீர் ஊற்றவும். தண்ணீர் சூடானதும் சர்க்கரையைக் கொட்டி கம்பிப்பாகு பதம் வரும் வரை காய்ச்சவும்.பின்பு அதில் மைதா கரைசலை சிறிது சிறிதாக ஊற்றிக் கிளறவும். கலவை நன்றாக நுரைத்து வரும் போது, எலுமிச்சை விழுதை அதில் போட்டு நன்றாகக் கிளறவும். பிறகு நெய்யை சிறிது சிறிதாக அதில் ஊற்றவும். இப்போது அந்தக் கலவையில் லெமன் அல்லது ஆரஞ்சு கலர் சில துளிகள், வெனிலா எசன்ஸ் சில துளிகள், ஏலக்காய்த் தூள், பொடிப் பொடியாக நறுக்கி நெய்யில் வறுக்கப்பட்ட முந்திரி பருப்பு, திராட்சை இவைகளையும் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.கலவை பர்பி பதத்துக்கு வந்தவுடன் அடுப்பில் இருந்து இறக்கி, நெய் தடவப்பட்ட தட்டில் கொட்டி சமமாக்கவும். ஆறியவுடன் துண்டுகளாக வெட்டி பரிமாறவும்.அதிக செலவில்லாமல் வித்தியாசமான சுவையில் லெமன் கேக் ரெடி

Related posts

சோயா சங்க்ஸ் பக்கோடா

பனீர் கச்சோரி

பாதாம் அல்வா