சட்டப்பேரவையில் கடும் அமளி: அதிமுக உறுப்பினர்கள் வெளியேற்ற சபாநாயகர் உத்தரவு

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை நிகழ்வுகள் தொடங்கியது. தமிழ்நாடு சட்டப்பேரவை கூடியதும் அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டுள்ளனர். மூன்றாவது நாளாக கேள்வி நேரத்தை ஒத்திவைத்து கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்த கோரி அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டுள்ளனர்.

அவையை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மதிக்க வேண்டும். கேள்வி நேரம் முடிந்த உடன் பேச அனுமதி அளிப்பதாக சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார். எடப்பாடி பழனிச்சாமி மட்டும் பேசலாம் மற்றவர்கள் அமரவேண்டும் என்றும் சபாநாயகர் கூறினார். சட்டமன்றத்தை இடையூறு இல்லாமல் சுமுகமாக நடத்த வேண்டும் என்று சபாநாயகர் கேட்டுக்கொண்டார். சபாநாயகர் அறிவுரையை கேட்காமல் அதிமுக உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.

அதிமுக உறுப்பினர்களை வெளியேற்றவும் இன்று ஒரு நாள் பேரவை நடவடிக்கைகளில் கலந்து கொள்ள அதிமுக உறுப்பினர்களுக்கு தடை விதித்தும் சபயநாயகர் உத்தரவு பிறப்பித்துள்ளார். நினைப்பதை எல்லாம் பேசுவதற்கு இது பொதுக்கூட்டம் மேடை அல்ல என்றும் கள்ளக்குறிச்சி சம்பவத்தை அரசியலாக்குகிறார்கள். அவை மாண்பு, மதிப்பை குறிக்கும் வகையில் அதிமுக செயல்படுகிறது.

தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினர்களுக்கு சபாநாயகர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசியது அவைகுறிப்பில் இடம்பெறாது என்று சபாநாயகர் அறிவித்துள்ளார். சபாநாயகர் உத்தரவிட்டதை தொடர்ந்து அதிமுகவினரை அவை காவலர்கள் வெளியேற்றினார்கள்.

Related posts

உத்தரப்பிரதேசத்தில் ஆன்மிக நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி 122 உயிரிழப்பு: தலைவர்கள் இரங்கல்

அமாவாசை மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்

பவானிசாகர் அணை நீர்மட்டம் 66 அடியாக உயர்வு