சட்டப்பேரவையில் கடும் அமளி.. அதிமுக உறுப்பினர்கள் இன்று ஒருநாள் அவை நடவடிக்கைகளில் பங்கேற்க தடை..!!

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையின் 2-வது நாள் கூட்டம் இன்று தொடங்கியது. கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்ததில் பலர் உயிரிழந்த சம்பவம் கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தையே உலுக்கி வருகிறது. இந்த சூழலில் அதிமுக, பாமக உறுப்பினர்கள் கருப்புச்சட்டை அணிந்து சட்டப்பேரவைக்கு வந்தனர். தொடர்ந்து கூட்டத்தொடர் தொடங்கியதும் விஷச் சாராய விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அமளியில் ஈடுபட்டுள்ளனர். அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் இருக்கையில் அமருமாறு சபாநாயகர் அப்பாவு வேண்டுகோள் விடுத்துள்ளார். அவை முன்னவரை பேசவிடாமல் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சட்டப்பேரவையில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். சட்ட விதிகளை மீறி கேள்வி நேரத்தின்போது முழக்கம் எழுப்பி அமளியில் ஈடுபட்டதால் அதிமுகவினரை சபாநாயகர் அதிமுக உறுப்பினர்களை வெளியேற்ற உத்தரவிட்டார்.

இந்நிலையில், சட்டப்பேரவையில் பேசிய சபாநாயக்கர் அப்பாவு; அதிமுக உறுப்பினர்கள் இன்று ஒருநாள் அவை நடவடிக்கைகளில் பங்கேற்க முடியாது. அதிமுக எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோரின் பேச்சுக்கள் அவை குறிப்பில் இடம்பெறாது. கள்ளக்குறிச்சி விஷச் சாராயம் குறித்து அனைத்து கட்சியினரும் விவாதிக்கலாம். கவன ஈர்ப்பு தீர்மானம் மீது எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் விவாதிக்க நேரம் வழங்கப்படும். மேலும், கள்ளக்குறிச்சி விஷச் சாராய உயிரிழப்பு தொடர்பாக அனைத்து கட்சியினரும் விவாதம் நடத்த அனுமதி வழங்கப்படும் என்று அவர் கூறினார். பாமக, பாஜக உறுப்பினர்கள் அவை நடவடிக்கைகளில் தொடர்ந்து பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

Related posts

வெடிகுண்டு தயாரிப்பு: இந்தியா புதிய சாதனை

புனேவில் மேலும் 2 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு

பர்படாஸில் இந்திய அணி வீரர்கள் தொடர்ந்து தவிப்பு