லெக்ட்ரிக்ஸ் எல்எக்ஸ்எஸ் 2.0

லெக்ட்ரிக்ஸ் இவி நிறுவனம், புதிய எல்எக்ஸ் 2.0 என்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. ஷோரூம் விலையாக சுமார் ₹79,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் 2.3 கிலோவாட் அவர் பேட்டரி இடம் பெற்றுள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 98 கி.மீ தூரம் வரை செல்லும். இந்த நிறுவனம் ஏற்கெனவே எல்எக்ஸ்எஸ் 3.0 என்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டரை சந்தைப்படுத்தியுள்ளது. இரண்டிலுமே 2.2 கிலோவாட் அவர் பிஎல்டிசி ஹப் மோட்டார் தான் இடம் பெற்றுள்ளது. அதிகபட்சமாக மணிக்கு 60 கி.மீ வேகம் வரை செல்லும். 40 கி.மீ வேகத்தை 10.2 நொடிகளில் எட்டும். முன்பதிவு செய்பவர்களுக்கு மார்ச் மாதம் வாகனம் டெலிவரி செய்யப்படும் என நிறுவன தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது

தூய்மை சேவை விழிப்புணர்வு மாரத்தான்: நகராட்சி நிர்வாக இயக்குநர் தொடங்கி வைத்தார்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால், கடனுதவி: கலெக்டர் வழங்கினார்