லெகான் சிக்கன் பிரியாணி

லெகான் சிக்கன் பிரியாணி

ஊற வைக்க தேவையான பொருட்கள்

லெகான் சிக்கன் – 1/2 கிலோ
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
மல்லித்தூள் – 1 தேக்கரண்டி
சிவப்பு மிளகாய்த்தூள் – 1.5 தேக்கரண்டி
எண்ணெய் – 3 தேக்கரண்டி
தயிர் – 1/2 கப்
பிரியாணிக்கு தேவையான பொருட்கள்
பாஸ்மதி அரிசி – 400 கிராம்
நெய் – 3 தேக்கரண்டி
எண்ணெய் – 2 தேக்கரண்டி
பட்டை – 1 துண்டு
பிரிஞ்சி இலை – 1
ஏலக்காய் – 4
லவங்கம் – 4
அன்னாசிப்பூ – 1
பெரிய வெங்காயம் – 2
இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
கொத்தமல்லி – பொடியாக நறுக்கியது சிறிதளவு
புதினா – பொடியாக நறுக்கியது சிறிதளவு
பச்சை மிளகாய் – 6
தக்காளி – 3.

செய்முறை

லெகான் சிக்கனை கழுவி சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அதில் 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு, 1 தேக்கரண்டி மிளகாய்த்தூள், 1 தேக்கரண்டி மல்லித்தூள், 1.5 தேக்கரண்டி சிவப்பு மிளகாய்த்தூள், 3 தேக்கரண்டி எண்ணெய், 1/2 கப் தயிர் ஆகியவற்றைச் சேர்த்து கலந்து 15 முதல் 30 நிமிடங்களுக்கு ஊற வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் 1 கப் பாஸ்மதி அரிசி சேர்த்து 15 நிமிடங்களுக்கு ஊற வைத்துக் கொள்ளவும். ஒரு பிரஷர் குக்கரில் 2 தேக்கரண்டி எண்ணெய் மற்றும் 2 தேக்கரண்டி நெய் சேர்த்து சூடாக்கவும். சூடானதும் 1 பிரிஞ்சி இலை, 1 அன்னாசிப்பூ, 1 துண்டு பட்டை, 4 ஏலக்காய், 4 லவங்கம் ஆகியவற்றை சேர்த்து தாளிக்கவும். அதனுடன் நறுக்கிய வெங்காயம் சேர்த்து, வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கிக் கொள்ளவும். இப்பொழுது 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது, 4 பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, புதினா சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கிக்கொள்ளவும். அதனுடன் 1 தக்காளி சேர்த்துக்கொள்ளவும், தக்காளி மென்மையாகும் வரை வதக்கவும். இப்போது ஊற வைத்த சிக்கனை சேர்த்து 10 நிமிடங்களுக்கு மூடி வைத்து வேக வைக்கவும். சிக்கன் ஓரளவு வெந்த பின்னர், ஊறவைத்து தண்ணீர் வடித்த பாஸ்மதி அரிசி சேர்த்துக் கொள்ளவும். ஒரு கப் அரிசிக்கு 1.5 கப் வீதம் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். இறுதியாக ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து பிரஷர் குக்கரை மூடி 3 விசில் வைக்கவும். பிரஷர் ரிலீஸ் ஆனதும் பிரியாணியை மென்மையாக கிளறிவிடவும். இப்போது சுவையான சிக்கன் பிரியாணி தயார்.

Related posts

தர்பூசணி தோல் துவையல்

உளுத்தம் பருப்பு துவையல்

பீட்ரூட் குழம்பு