லெபனான் மீது இஸ்ரேல் விமானப்படைகள் தாக்குதல் நடத்தியதில் 187 பேர் பலி: 700-க்கும் மேற்பட்டோர் படுகாயம்

ஈரான் ஆதரவு ஆயுதக் குழுவான ஹிஸ்புல்லா அமைப்பினரின் 300 இடங்களை குறித்து வைத்து இஸ்ரேல் விமானப்படை தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலின் 12-க்கும் மேற்பட்ட போர் விமானங்கள், தெற்கு லெபனான் பகுதியில் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில் குழந்தைகள், பெண்கள் உட்பட 187-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இதையடுத்து ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் 117 பணய கைதிகளை உயிருடன் மீட்டுள்ளது. அதேபோல், ஹமாஸ் ஆயுதக்குழுவினர்களால் கடத்தப்பட்டு கொல்லப்பட்ட பணய கைதிகளின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. ஆனால், இன்னும் 100க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் ஹமாஸ் வசம் பணய கைதிகளாக உள்ளனர்.

இதனிடையே, இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போரில் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்களும், லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளும் ஆதரவு அளித்து வருகின்றனர். குறிப்பாக, லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி முதல் இஸ்ரேல் மீது தொடர்ந்து ராக்கெட் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது. மேலும், ஹிஸ்புல்லா தாக்குதலால் இஸ்ரேலின் வடக்கு பகுதியில் இருந்து வெளியேறிய மக்களை மீண்டும் அதே பகுதியில் குடியமர்த்த இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது. ராணுவ நடவடிக்கை மூலமாகவும் இந்த திட்டத்தை செயல்படுத்த இஸ்ரேல் தயாராகி வருகிறது.

இந்த நிலையில் லெபனான் மீது இஸ்ரேல் இன்று குண்டுமழை பொழிந்து வருகிறது. ஹிஸ்புல்லா அமைப்பினரின் 300 இடங்களை குறித்து வைத்து இஸ்ரேல் விமானப்படை தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலின் 12-க்கும் மேற்பட்ட போர் விமானங்கள், தெற்கு லெபனான் பகுதியில் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில் குழந்தைகள், பெண்கள் உட்பட 187-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேல் தாக்குதலில் படுகாயமடைந்த 700-க்கும் மேற்பட்டோர் வருவதாக லெபனான் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

லெபனானில் தங்களின் தக்குதலை மேலும் விரிவுபடுத்த உள்ளதாக இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் பதற்றமான சூழல் நிலவுகிறது.

Related posts

எழும்பூர் கண்ணப்பர் திடல் அருகே 1 14 குடும்பங்களுக்கு வீடுகளை ஒதுக்கி ஆணை வழங்கிய உதயநிதிக்கு காங். பாராட்டு

திருப்பதி லட்டு பிரசாதத்தில் குட்கா பாக்கெட் இருந்ததாக தெலுங்கானாவைச் சேர்ந்த பக்தர் புகார்

திருப்பதிக்கு நெய் சப்ளை செய்த திண்டுக்கல் ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்துக்கு ஒன்றிய அரசின் சுகாதாரத்துறை நோட்டீஸ்