சிவந்த இதழ்கள்!

புகைப்பழக்கம், மதுப்பழக்கம் இருந்தால்தான் உதடுகள் கருமையாகும் என்றில்லை, அடிக்கடி ஹோட்டலில் அருந்தும் ஃபாஸ்ட் புட்கள், பாட்டிலில் அடைத்த குளிர்பானங்கள், செயற்கை நிறமிகள் மிகுந்த பானங்கள், உணவுகள் என உட்கொள்வதாலும் கூட உதடுகள் கருமையாகும். இதோ இயற்கையான சிவந்த உதடுகளைப் பெற சில டிப்ஸ்.

ரோஜா மற்றும் பால்: பாலில் சில ரோஜா இதழ்களை எடுத்து இரவில் ஊற வைத்துவிடுங்கள். மறுநாள் காலை ரோஜா இதழ்களை எடுத்து கொஞ்சம் பால் ஊற்றி மைய பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ளவும். பின் அதை உதட்டில் பேக் போல் அப்ளை செய்து 15 நிமிடங்கள் ஊறவைத்து கழுவிவிடுங்கள். இதை தினமும் செய்து வர உதட்டின் நிறம் இயற்கையாகவே சிவப்பாக மாறும்.

பீட்ரூட் சாறு: பீட்ரூட் சாறை தேனில் நன்கு கலந்து அதை உதட்டில் தினமும் தடவி வர உதடு சிவப்பாகவும் பொலிவுடனும் இருக்கும்.

தேன் மற்றும் சர்க்கரை: தேனில் சர்க்கரை கலந்து உதட்டில் தடவி ஸ்கிரப் செய்யுங்கள். இதனால் உதட்டில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். உதட்டிற்கு எண்ணெய் பதமும் கிடைக்கும். இதனால் உதட்டின் கருமைநிறம் மாறி மென்மையாகவும், சிவப்பாகவும் இருக்கும்.மஞ்சளுடன் பால் கலந்து பேஸ்ட் போல் குழைத்துக் கொள்ளவும். பின் அந்த பேஸ்ட்டை உதட்டில் அப்ளை செய்து காயும் வரை அப்படியே விட்டுவிடுங்கள். காய்ந்து அதுவாகவே உதிர்ந்து விழும்போது கழுவிவிடுங்கள்.

இரவு தூங்கும்போது செய்து வந்தால் நல்ல மாற்றம் ஏற்படும்.தேங்காய் எண்ணெய் மற்றும் பாதாம் எண்ணெயை சம அளவு கலந்து தினமும் தூங்க செல்வதற்கு முன் உதடுகளில் தடவ வேண்டும். இது உதடுகளை சிவப்பாகவும், மென்மையாகவும் மாற்றுகிறது.கேரட், பீட்ரூட் துண்டை மசித்து அந்த விழுதை உதட்டின் மீது தடவி விடலாம். செயற்கையாக இல்லாமல் இயற்கையாக உதட்டுக்கு நிறம் அளிக்க கூடியவை இவை. இது உதட்டுக்கு இயற்கையான சிவப்பு நிறத்தை அளிப்பதோடு, மென்மையாகவும் மாற்றும்.

ஆரஞ்சு பழத்தின் தோலை எடுத்து நிழலில் உலர்த்தி பொடி செய்து அந்த பொடியுடன் சிறிது பால் சேர்த்து உதட்டின் மீது தடவி வர உதடு பளிச்சென்று மென்மையாகவும் இருக்கும். உதட்டின் நிறமும் மேம்படும்.
தேங்காய் எண்ணெய், எலுமிச்சை பழச் சாறு, தேன் இந்த மூன்று பொருட்களையும் கலந்து உதடுகளின் மேல் தடவி வந்தால் உதடு ஒரே நாளில் நல்ல மாற்றத்தை பெரும்.
– கவிதா பாலாஜிகணேஷ்.

 

 

 

Related posts

தேர்தலுக்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில் விக்கிரவாண்டியில் அனல் பறக்கும் பிரசாரம்!

அமெரிக்க அதிபர் தேர்தல்; கமலா ஹாரிசுக்கு பெருகும் ஆதரவு

அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!