முன்னிலை பெற போராடும் வங்கதேசம்

ராவல்பிண்டி: பாகிஸ்தான் அணியுடனான முதல் டெஸ்டில், முதல் இன்னிங்சில் முன்னிலை பெற வங்கதேசம் கடுமையாகப் போராடுகிறது. ராவல்பிண்டி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாஸ் வென்ற வங்கதேசம் பந்துவீச… பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 448 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. சைம் அயூப் 56, சவுத் ஷகீல் 141, முகமது ரிஸ்வான் 171* ரன் விளாசினர். அடுத்து களமிறங்கிய வங்கதேசம் 2ம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 27 ரன் எடுத்திருந்தது. நேற்று நடந்த 3வது நாள் ஆட்ட முடிவில் அந்த அணி 5 விக்கெட் இழப்புக்கு 316 ரன் எடுத்துள்ளது (92 ஓவர்). ஷத்மன் இஸ்லாம் 93, மோமினுல் ஹக் 50, ஜாகிர் ஹசன் 12, கேப்டன் நஜ்முல் ஷான்டோ 16, ஷாகிப் அல் ஹசன் 15 ரன்னில் பெவிலியன் திரும்பினர். முஷ்பிகுர் ரகிம் 55 ரன், லிட்டன் தாஸ் 52 ரன்னுடன் களத்தில் உள்ளனர். கை வசம் 5 விக்கெட் இருக்க, வங்கதேசம் இன்னும் 132 ரன் பின்தங்கியுள்ள நிலையில் இன்று 4வது நாள் ஆட்டம் நடக்கிறது.

Related posts

வரலாற்றில் இல்லாத அளவுக்கு சென்னையில் ஆபரணத் தங்கம் விலை புதிய உச்சம்!

நெய் விநியோகித்த ஏ.ஆர்.டெய்ரி புட் நிறுவனத்தில் ஒன்றிய உணவு பாதுகாப்புத்துறை சோதனை!!

கோவையில் ரவுடி ஆல்வின் துப்பாக்கியால் சுட்டுப் பிடிக்கப்பட்டது தொடர்பாக காவல் ஆணையர் விளக்கம்