நாட்டிற்காகப் பாடுபட்ட தலைவர்களின் பிறந்த நாள் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி

சென்னை: தமிழ் வளர்ச்சித் துறையின் 2021-2022ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை அறிவிப்பிற்கிணங்க “நாட்டிற்காகப் பாடுபட்ட தலைவர்களான அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் பேச்சுப் போட்டி 06.08.2024 அன்றும், முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த நாள் பேச்சுப் போட்டி 08.08.2024 அன்றும் கல்லூரி மாணவர்களிடையே, தென் சென்னையில் காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரியிலும், வட சென்னையில் டாக்டர் அம்பேத்கர் கலைக் கல்லூரியிலும், மத்திய சென்னையில் மாநிலக் கல்லூரி என 3 நிலைகளில் சென்னை மாவட்டத்தில் நடைபெற உள்ளது.

இப்பேச்சுப் போட்டிகளில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.5000/- இரண்டாம் பரிசு ரூ.3000 மூன்றாம் பரிசு ரூ.2000 மற்றும் சான்றிதழும் வழங்கிச் சிறப்பிக்கப்பெறுவர். அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் பேச்சுப்போட்டியில் கீழ்கண்ட தலைப்பில் போட்டி நடைபெறுகிறது. இந்திய ரிசர்வ் வங்கியும் அம்பேத்கரும், பெண்கள் முன்னேற்றத்தில் அம்பேத்கரின் பங்கு, ரூபாயும் அம்பேத்கரும், உணவு பற்றி அம்பேத்கரின் பார்வை, தொழிலாளர் சட்டமும் அம்பேத்கரும் ஆகிய தலைப்புகளில் போட்டி நடைபெறுகிறது.

முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த நாள் பேச்சுப்போட்டியில் கீழ்கண்ட தலைப்பில் போட்டி நடைபெறுகிறது. கலைஞரும் திரை வசனமும், பெண்களுக்கு உரிமை, கலைஞரின் எழுத்துப் பணி, சட்டமன்ற உறுப்பினர் கலைஞர், முதலமைச்சர் கலைஞர் என்ற தலைப்புகளில் போட்டி நடைபெற உள்ளது.

Related posts

புதுக்கோட்டை மீனவர்களுக்கு ஜூலை 15 வரை காவல் நீட்டிப்பு..!!

திண்டுக்கலில் ரூ.15,000 லஞ்சம் வாங்கிய நில அளவையர் கைது..!!

இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வரும்போது அக்னி வீர் திட்டம் நீக்கப்படும்: மக்களவையில் அகிலேஷ் யாதவ் உரை