ஒன்றிய அரசின் 3 குற்றவியல் சட்டங்களை கண்டித்து வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பு

ஊத்துக்கோட்டை: பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற ஒன்றிய அரசை வலியுறுத்தி வழக்கறிஞர்கள் ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுப்பட்டடனர். சமீபத்தில் ஒன்றிய அரசு குற்றவியல் சட்டங்களின் பெயரை இந்தி சமஸ்கிருதத்தில் மாற்றியும், சட்டங்களை முழுவதுமாக மாற்றியமைத்து உருகுலைக்கும் வகையில் பாராளுமன்றத்தில் விவாதமின்றி நிறைவேற்றி, வருகின்ற ஜூலை 1ம் தேதி முதல் அமுல்படுத்தப்படும் என அறிவித்துள்ளது.

மேலும், தமிழகத்தில் தொடர்ந்து வழக்கறிஞர்கள் மிரட்டப்படுவதும், தாக்கப்படுவதும், கொலை செய்யப்படுவதுமாக உள்ளது. இதனால் வழக்கறிஞர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தார்க்கு பாதுகாப்பற்ற சூழல் உள்ளதை வழியுறுத்தியும், தமிழக முதல்வரும், ஒன்றிய அரசும், இரும்புக்கரம் கொண்டு தடுத்திடும் வகையில் வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி நேற்றுமுன்தினம் ஊத்துக்கோட்டை வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதை தொடர்ந்து நேற்று ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் வேல்முருகன் தலைமை தாங்கினார். செயலாளர் கவிபாரதி, பொருளாளர் நரசிம்மன் முன்னிலை வகித்தனர். மேலும், மூத்த வக்கில்கள் குணசேகரன், ராஜசேகரன், பிஎம்.சாமி, சீனிவாசன், இளங்கோவன், பார்த்திபன் பாலசுப்பிரமணிய குமார், சாந்தகுமார், சசி, ரமேஷ்குமார், பிரகாஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

லஞ்ச வழக்கில் கைதான துணை வட்டாட்சியர் தப்பியோட்டம்..!!

நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அருவியில் குளிக்க அனுமதி..!!

சிவகாசி அருகே பீகாரைச் சேர்ந்த தொழிலாளி கொலை வழக்கு: 2 பேர் கைது