எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் மோதல் தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும்: உயர் நீதிமன்றத்தில் முறையீடு

சென்னை: எழும்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கறிஞர்களிடையே மோதல் சம்பவம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு தாமாக முன்வந்து வழக்கை விசாரிக்க கோரி முறையிடப்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமையன்று எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை மற்றொரு வழக்கறிஞரிடம் கைமாற்றி விடுவதற்கான பேச்சுவார்த்தை நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றுள்ளது. அப்போது இரு தரப்பு வழக்கறிஞர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து எழும்பூர் காவல் நிலையத்தில் இருதரப்பும் புகார் அளித்ததின் பேரில் 20 பேர் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளக்கோரியும், நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரணை நடத்த கோரியும் வழக்கறிஞர் சேவியர் பெலிக்ஸ் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி குமரேஷ்பாபு அமர்வு முன்பு முறையீடு செய்தார். இந்த முறையீட்டை கேட்ட பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு பரிசீலனை செய்வதாக தெரிவித்தது.

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்