ஒன்றிய அரசை கண்டித்து சட்ட கல்லூரி மாணவர்கள் போராட்டம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டில், ஒன்றிய அரசை கண்டித்து சட்ட கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மணிப்பூர் மாநிலத்தில் பெண்களுக்கு எதிராக நடைபெற்ற சம்பங்கள் நடைபெற்றதை தொடர்ந்து நாடு முழுவதும் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றது. தமிழகத்திலும் பல்வேறு அரசியல் கட்சியினர், கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டு சட்ட கல்லூரி மாணவர்கள் 200க்கும் மேற்பட்டோர் கல்லூரி வளாகத்தில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவர்கள் மணிப்பூர் மாநிலத்தில் பெண்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்ட குற்றவாளியை கைது செய்ய வேண்டும். அம்மாநிலத்தில் அமைதி நிலவ புதிய சட்டம் கொண்டு வர வேண்டும் எனக் கோரி, ஒன்றிய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தால், கல்லூரி வளாகத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.

Related posts

சவாரி அழைத்து செல்வதுபோல் நடித்து பீகார் தொழிலாளர்களை கடத்தி பணம் பறித்த ஆட்டோ டிரைவர்: தப்பிய கூட்டாளிகளுக்கு வலை

காவேரி மருத்துவமனை, டிசிஎஸ் நிறுவனம் சார்பில் புற்றுநோய் விழிப்புணர்வு மாரத்தான்: 5000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

தமிழகம் முழுவதும் 99 சதவீத காவல்நிலையங்களில் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளது: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்