Thursday, July 4, 2024
Home » தமிழ்நாடு மாநிலச் சட்ட ஆட்சிமொழி ஆணையத்தின் மூலமாக தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட 100 சட்டப் புத்தகங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்

தமிழ்நாடு மாநிலச் சட்ட ஆட்சிமொழி ஆணையத்தின் மூலமாக தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட 100 சட்டப் புத்தகங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்

by Porselvi

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (2.7.2024) தலைமைச் செயலகத்தில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா நிறைவினை முன்னிட்டு, தமிழ்நாடு மாநிலச் சட்ட ஆட்சிமொழி ஆணையத்தின் மூலமாக ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட 37 மையச் சட்டங்கள் மற்றும் 63 தமிழ்நாடு மாநிலச் சட்டங்கள், என மொத்தம் 100 சட்டப் புத்தகங்களை வெளியிட்டார்.முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா நிறைவினை முன்னிட்டு, தமிழ்நாடு மாநிலச் சட்ட ஆட்சிமொழி ஆணையத்தால் 100 சட்டங்களை புத்தக வடிவில் வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட 37 மையச் சட்டங்கள் மற்றும் 63 தமிழ்நாடு சட்டங்களில், 43 மறுமதிப்பு செய்யப்பட்ட சட்டங்கள். 20 புதிய பதிப்பு செய்யப்பட்ட சட்டங்கள், என மொத்தம் 100 சட்டப் புத்தகங்கள் வெளியிடப்பட்டன.

37 மையச் சட்டப் புத்தகங்களின் பட்டியல்

1. தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம், 2013.
2. குலுக்குச் சீட்டுகள் ( ஒழுங்குறுத்தல்) சட்டம், 1998.
3. இந்திய அரசுச் சின்னம் (முறையற்று பயன்படுத்தப்படுவதைத் தடை செய்தல்) சட்டம், 2005.
4. சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் சட்டம், 2005.
5. பேரழிவினைச் சமாளித்தல் சட்டம், 2005.
6. பெற்றோர்களையும் மூத்தகுடிமக்களையும் பேணுதல் மற்றும் அவர்களின் நல்வாழ்வு சட்டம், 2007.
7. சரக்குகளின் புவியியல் குறியீடுகள் (பதிவு செய்தல் மற்றும் பாதுகாத்தல்) சட்டம், 1999.
8. பாலியல் குற்றங்களிலிருந்து சிறார்களைப் பாதுகாத்தல் சட்டம், 2012.
9. கல்லெண்ணெய் மற்றும் கனிமங்கள் குழாய்த்தொடர் (நிலத்தைப் பயன்படுத்துபவர் உரிமையைப் பெறுதல்) சட்டம், 1962.
10. விளையாட்டுகளை ஒலிபரப்பும் தனியலைகள் (இந்திய ஒலிபரப்புக் கழகத்துடன் பகிர்ந்து கொள்ளுதலை வலியுறுத்தும்) சட்டம், 2007.
11. அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி வாரியச் சட்டம், 2008.
12. இலவச மற்றும் கட்டாயக் கல்விக்கான குழந்தைகளின் உரிமைச் சட்டம், 2009.
13. தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியச் சட்டம். 1995.
14. தெற்காசிய பல்கலைக்கழகச் சட்டம், 2008.
15. அமைப்பு சாராத் தொழிலாளர்கள் சமூகப் பாதுகாப்புச் சட்டம், 2008.
16. சாலை வழி சரக்கூர்திச் சட்டம், 2007.
17. முஸ்லீம் பெண்கள் (திருமண உரிமைகளைப் பாதுகாத்தல்) சட்டம். 2019.
18. மையக் கல்வி நிறுவனங்கள் (ஆசிரியர்களின் பணிநிலைப் பிரிவில் ஒதுக்கீடு) சட்டம், 2019.
19. உத்தராஞ்சல் (பெயர் மாற்றம் செய்தல்) சட்டம், 2006.
20. சிறைக் கைதிகளைத் தாயகத்திற்கு அனுப்புதல் சட்டம், 2003.
21. குழந்தைத் திருமணத் தடைச் சட்டம், 2006.
22. ஒரிசா (பெயர் மாற்றம் செய்தல்) சட்டம், 2011.
23. அயல்நாட்டு வான்கலச் (எரிபொருள் மற்றும் உயவுப் பொருட்கள் மீது வரிகள் மற்றும் தீர்வைகள் விதிப்பதிலிருந்து விலக்களித்தல்) சட்டம், 2002.
24. இந்தியக் கல்நார்எண்ணெய் மற்றும் எரிசக்தி நிறுவனச் சட்டம். 2017.
25. சிகரெட்டுகள் மற்றும் பிற புகையிலைத் தயாரிப்புகள் (விளம்பரம் செய்தலைத் தடைசெய்தல் மற்றும் வணிகம் மற்றும் வாணிபம், உற்பத்தி செய்தல், வழங்குதல் மற்றும் விநியோகம் செய்தலை முறைப்படுத்துதல்) சட்டம், 2003.
26. ஆந்திரப் பிரதேசச் சட்டமன்ற மேலவைச் சட்டம், 2005.
27. மாற்றுதிறனாளிகளுக்கான உரிமைகள் சட்டம், 2016.
28. மனித ஏமக்காப்புக் குறைபாட்டு நுண்மம் மற்றும் ஏமக்குறைவு நோய் அறிகுறிச் (தடுத்தல் மற்றும் கட்டுப்படுத்துதல்) சட்டம், 2017
29. தேசிய விளையாட்டுப் பல்கலைக்கழகச் சட்டம், 2018.
30. மாற்றுப்பாலினத்தவர் (உரிமைகள் பாதுகாப்பு) சட்டம், 2019.
31. மின்னணு மென்சுருட்டுகளைத் (தயாரித்தல், உற்பத்தி இறக்குமதி ஏற்றுமதி, இடம்விட்டு எடுத்துச் செல்லுதல், விற்பனை பகிர்ந்தளித்தல், சேமித்தல் மற்றும் விளம்பரம் செய்தல்) தடையுறுத்துதல் சட்டம், 2019
32.தேசியத் தலைநகர் தில்லியின் ஆட்சிநிலவரைச் (அனுமதிபெறாத குடியிருப்புகளில் குடியிருந்து வருவோரின் சொத்துரிமைகளை ஏற்பளித்தல்) சட்டம், 2019.
33. இராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனச் சட்டம், 2012
34. இராஜீவ் காந்தி தேசிய வான்வழிப் பயணப் பல்கலைக்கழகச் சட்டம். 2013,
35. காலணி வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனச் சட்டம், 2017.
36. தாத்ரா-நாகர் ஹவேலி மற்றும் தமண் டையூ (ஒன்றியத்து ஆட்சிநிலவரைகளை ஒன்றிணைத்தல்) சட்டம், 2019.
37. ஜம்மு காஷ்மீர் ஆட்சி மொழிகள் சட்டம், 2020

63 தமிழ்நாடு மாநில சட்டப் புத்தகங்களின் பட்டியல்: தமிழ்நாடு சட்டங்கள் – மறுபதிப்பு புத்தகங்கள்

1. தமிழ்நாடு ஆட்சி மொழிச் சட்டம், 39/1956.
2. தமிழ்நாடு விளம்பரப் பொருள்களின் கட்டாயத் தணிக்கைச் சட்டம். 34/1987.
3. தமிழ்நாடு திரைப்படங்கள் தொடர்பான விளம்பரங்களைக் கட்டாயமாகத் தணிக்கை செய்தல் சட்டம் 35/1987.
4. தமிழ்நாடு மருந்துப் பொருள்கள் மற்றும் பிற பண்டகப் பொருள்கள் 06/1988. (சட்டவிரோதமாக வைத்திருத்தல்) சட்டம்.
5. தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றச் சட்டம், 40/1992.
6. தமிழ்நாடு கல்வி நிலையங்கள் (கட்டாய நன்கொடை வசூலித்தலைத் தடை செய்தல்) சட்டம், 57/1992
7. தமிழ்நாடு பனைப்பொருட்கள் வளர்ச்சி வாரியச் சட்டம். 15/1994.
8. தமிழ்நாடு எண்ணெய்ப்பனை (உற்பத்தி மற்றும் பதனிடுதலை ஒழுங்குமுறைப்படுத்துதல்) சட்டம், 34/1994.
9. தமிழ்நாடு கருங்காலி வகை மரங்கள் (பாதுகாப்புச்) சட்டம், 01/1995.
10. தமிழ்நாடு நீர்வாழ் உயிரின வளர்ப்பு (முறைப்படுத்துதல்) சட்டம்.06/1995.
11. தமிழ்நாடு கட்டாயத் தொடக்கக் கல்விச் சட்டம், 33/1995.
12. மெட்ராஸ் மாநகர் (பெயர் மாற்றம்) சட்டம், 28/1996.
13. தமிழ்நாடு தனியார் மருத்துவ (முறைப்படுத்துதல்) சட்டம், 04/1997. நிறுவனங்கள்
14. தமிழ்நாடு கேலிவதை செய்தலைத் தடுத்தல் சட்டம் 07/1997.
15. தமிழ்நாடு தொழிலியல் நகரியப்பகுதி மேம்பாட்டு அதிகார அமைப்புச் சட்டம் 33/1997.
16. தமிழ்நாடு சித்த மருத்துவ முறை (மேம்படுத்துதல் மற்றும் மருத்துவத் தொழிலாற்றுநர்கள் பதிவு செய்து கொள்ளுதல்) சட்டம், 34/1997.
17. தமிழ்நாடு மின் இயங்கேணிகள் சட்டம், 35/1997.
18. தமிழ்நாடு நகர் சார்ந்த பரப்பிடங்களிலுள்ள விலங்குகள் மற்றும் பறவைகள் (கட்டுப்பாடு செய்தல் மற்றும் முறைப்படுத்துதல்) சட்டம். 46/1997.
19. தமிழ்நாடு பெண்ணிற்குத் துன்பம் விளைவித்தலைத் தடை செய்கின்ற சட்டம், 44/1998.
20. தமிழ்நாடு தொழிலியல் துறைக்கான நோக்கங்களுக்காக நிலத்தைக் கையகப்படுத்துதல் சட்டம், 10/1999.
21. தமிழ்நாடு வழக்குரைஞர்களின் நலநிதியச் சட்டம், 25/1999. எழுத்தர்களுக்கான
22. தமிழ்நாடு குடியானவர் நீர்ப்பாசன அமைப்புமுறை மேலாண்மைச் சட்டம், 07/2001.
23. தமிழ்நாடு உயிரோடு நபர் ஒருவரைப் புதைக்கும் சடங்கினையும் பழக்கத்தினையும் தடை செய்தல் சட்டம், 44/2002.
24. தமிழ்நாடு புகைபிடித்தலையும் எச்சில் உமிழ்வதையும் தடை செய்யும் சட்டம், 04/2003.
25. தமிழ்நாடு தமிழ் கற்பதற்கான சட்டம், 13/2006.
26. தமிழ்நாடு கல்வி வளர்ச்சி நாள் (விளம்புகை மற்றும் கொண்டாடுதல்) சட்டம், 26/2006.
27. தமிழ்நாடு ஏரிகளைப் பாதுகாத்தல் மற்றும் ஆக்கிரமிப்பை அகற்றுதல் சட்டம், 08/2007.
28. தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகளுக்கான நல வாரியச் சட்டம், 18/2007.
29. தமிழ்நாடு மீனவர்கள் மற்றும் மீன்பிடிப்பதிலும் பிற தொடர்புடைய நடவடிக்கைகளிலும் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்கள் (சமூகப் பாதுகாப்பு மற்றும் நலச்) சட்டம், 19/2007.
30. தமிழ்நாடு கிறித்துவப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் இஸ்லாமிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (தனியார் கல்வி நிலையங்கள் உள்ளடங்கலான கல்வி நிலையங்களில் இடங்களை மற்றும் அரசின் கீழ் வரும் பணிகளில் நியமனங்களை அல்லது பதவிகளை ஒதுக்கீடு செய்தல்) 1, 33/2007.
31. தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையச் சட்டம், 31/2008.
32. தமிழ்நாடு மருத்துவச் சேவையில் ஈடுபட்டுள்ள நபர்கள் மற்றும் மருத்துவச் சேவையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் (வன்முறையையும் சொத்துக்குச் சேதத்தினை அல்லது இழப்பினை ஏற்படுத்துவதையும் தடுத்தல்) சட்டம், 48/2008.
33. தமிழ்நாடு அருந்ததியர்கள் (தனியார் கல்வி நிலையங்கள் உள்ளடங்கலான நிலையங்களில் இடங்கனை மற்றும் அரசின் கீழ் வரும் பணிகளில் நியமனங்களை அல்லது பதவிகளை பட்டியல் சாதியினருக்கான இட ஒதுக்கீட்டிற்குள்ளாக தனி ஒதுக்கீடு செய்தல்) சட்டம், 04/2009.
34. தமிழ்நாடு திருமணங்கள் பதிவுசெய்தல் சட்டம், 21/2009.
35. தமிழ்நாடு பள்ளிகள் (கட்டணம் முறைப்படுத்துதல்) சட்டம், 22/2009. வசூலிப்பதை
36. தமிழ்நாடு பெருநகர் திட்டக்குழு சட்டம், 30/2009.
37. தமிழ்நாடு (நகராட்சிப் பகுதிகளில்) மாற்றங்களின் மீதான தீர்வைச் சட்டம், 32/2009. சொத்துரிமை
38. தமிழ்நாடு மாநிலத் தொழில்நுட்பக் கல்வி மன்றச் சட்டம், 04/2010.
39. தமிழ்நாடு சமச்சீர் பள்ளிக் கல்வி முறைச் சட்டம், 08/2010.
40. தமிழ்நாடு மாநிலச் சிறுபான்மையினர் ஆணையச் சட்டம், 21/2010.
41. தமிழ்நாடு தமிழ்மொழி மூலமாகப் படித்த நபர்களை அரசின் கீழ் வரும் பணிகளில் முன்னுரிமை அடிப்படையில் நியமனம் செய்தல் சட்டம், 40/2010.
42. சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து அதிகார அமைப்புச் சட்டம், 44/2010.
43. தமிழ்நாடு தமிழகத்திற்கு வெளியே வாழும் தமிழர்கள் நலச்சட்டம்.04/2011.

தமிழ்நாடு மாநிலச் சட்டங்கள் – புதிய பதிப்பு புத்தகங்கள்

1. தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழக சட்டம், 09/2012.
2. தமிழ்நாடு உள்கட்டமைப்பு மேம்பாட்டுச் சட்டம், 22/2012.
3. தமிழ்நாடு பாரம்பரிய ஆணையச் சட்டம், 24/2012.
4. தமிழ்நாடு சிறப்புக் காவல் இளைஞர் படைச் சட்டம், 03/2013.
5. தமிழ்நாடு பொது இடங்களுக்குள் நுழைவதற்கான (ஆடை மீதான தடையை நீக்குதல்) சட்டம், 09/2014.
6. தமிழ்நாடு மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள் மற்றும் காப்பகங்கள் (ஒழுங்குமுறைப்படுத்தும்) சட்டம். 18/2014.
7. தமிழ்நாடு உள்ளாட்சி நிதித் தணிக்கைச் சட்டம், 24/2014.
8. தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் கேளிக்கைகள் வரிச் சட்டம். 20/2017.
9. தமிழ்நாடு எல்லை வரையறை ஆணையச் சட்டம், 23/2017.
10. தமிழ்நாடு சொத்துரிமையாளர் மற்றும் வாடகைதாரர்களின் உரிமைகள் மற்றும் பொறுப்புகள் முறைப்படுத்துதல் சட்டம், 42/2017.
11. தமிழ்நாடு தனியார் சட்டக் கல்லூரிகள் நிறுவுதல் (ஒழுங்குமுறைப்படுத்துதல்) சட்டம், 22/2018
12. தமிழ்நாடு லோக் ஆயுக்தா சட்டம், 33/2018.
13. தமிழ்நாடு தனியார் பள்ளிகள் (ஒழுங்குமுறைப்படுத்துதல்) சட்டம். 35/2019.
14. தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்படுத்துதல், சட்டம், 11/2020.
15. தமிழ்நாடு பொருளாதாரப் பள்ளிச் சட்டம், 25/2020.
16. தமிழ்நாடு அரசுப்பள்ளிகளின் மாணவர்களுக்கு மருத்துவம். பல் மருத்துவம், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி ஆகியவற்றின் இளங்கலை படிப்புகளுக்கு முன்னுரிமை அடிப்படையிலான சேர்க்கைச் சட்டம், 34/2020.
17. தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையச் சட்டம், 17/2021.
18. தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய (கூடுதல் செயற்பணிகள்), சட்டம், 14/2022.
19. தமிழ்நாடு பத்திர எழுத்தர்களின் நல நிதியச் சட்டம், 21/2022.
20. தமிழ்நாடு அடுக்குக்குடியிருப்பு சொத்துரிமைச் 44/2022. சட்டம்.
மேற்கண்ட 100 சட்டப் புத்தகங்களையும், தமிழ்நாடு அரசின் இணையதளத்திலிருந்து (www.tn.gov.in) பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த நிகழ்ச்சியில், சட்டத்துறை அமைச்சர் திரு. எஸ். ரகுபதி, தலைமைச் செயலாளர் திரு. சிவ் தாஸ் மீனா. இ.ஆ.ப., சட்டத்துறை அரசு செயலாளர் திரு. ஜார்ஜ் அலெக்சாண்டர். மாநில சட்ட ஆட்சிமொழி ஆணையத்தின் தலைவர் ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் திருமதி தாரணி, உறுப்பினர்கள் திரு. கோபி ரவிக்குமார், திரு. முகமது ஜியாபுதீன், திரு. வில்ஸ்டோ டாஸ்பின், திரு. முரளி அரூபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

You may also like

Leave a Comment

5 × one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi