சட்டங்களுக்கு பெயர் சூட்டும் விவகாரம் என்பது நாடாளுமன்றத்தின் விருப்பம் என ஒன்றிய அரசு வாதம்!!

சென்னை : 3 புதிய குற்றவியல் சட்டங்களுக்கு இந்தியில் பெயர் சூட்டியது சட்டவிரோதம் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவ்வழக்கு விசாரணையின் போது ஒன்றிய அரசு தரப்பில்,”3 சட்டங்களும் அரசியலமைப்புச் சட்ட விதிகளை மீறவில்லை; எவரின் அடிப்படை உரிமையும் பாதிக்கப்படவில்லை. சட்டங்களுக்கு பெயர் சூட்டும் விவகாரம் நாடாளுமன்றத்தின் விருப்பம்; இதில் நீதிமன்றம் தலையிட முடியாது,”இவ்வாறு வாதிடப்பட்டது. இதையடுத்து, 3 புதிய கிரிமினல் சட்டங்களுக்கு எதிரான வழக்கில் ஜூலை 23க்குள் பதில் அளிக்க மத்திய அரசுக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

மும்பை மரைன் ட்ரைவ் பகுதியில் கொண்டாட்டம்; நெரிசலில் சிக்கிய ரசிகர்களுக்கு மூச்சுத்திணறல்: மருத்துவமனையில் அட்மிட்; மாநில அரசு மீது குற்றச்சாட்டு

உதகை குதிரை பந்தய மைதானம் மீட்கப்பட்ட நடவடிக்கையில் தலையிட முடியாது: சென்னை உயர்நீதிமன்றம்

3 புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி உயர் நீதிமன்றம் அருகே திமுக சட்டத்துறை ஆர்ப்பாட்டம்