சட்டம் – ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் வகையில் பஜனைகள், அன்னதானம் நடத்துவோர் செயல்படகூடாது என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

சென்னை: அயோத்தியில் ராமர் கோயில் குடமுழுக்கு நிகழ்ச்சியை முன்னிட்டு தமிழகத்தில் பஜனைகள், அன்னதானம், ஊர்வலம், நேரலை நிகழ்சிகளுக்கு அனுமதி வழங்க கூடாது என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டதாக கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரபட்டது. இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது; அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கை ஒட்டி தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் பஜனை, அன்னதானம் நடத்த எந்த தடையும் அரசு விதிக்கவில்லை. தடை விதிக்கப்பட்டுள்ளதாக தவறான தகவல், வதந்தி பரப்ப அனுமதிக்கப்பட மாட்டாது என சென்னை உயநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

ராமர் கோயில் குடமுழுக்கை ஒட்டி பஜனை, சிறப்பு பூஜை நடத்துவோர் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். சட்டம் – ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் வகையில் பஜனைகள், அன்னதானம் நடத்துவோர் செயல்படகூடாது என சென்னை உயநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பக்தி என்பது அமைதி, மகிழ்ச்சிக்காக மட்டுமே; சமுகத்தில் உள்ள சமநிலையை சீர்குலைப்பதற்காக அல்ல என்பதை அனைவரும் உணரவேண்டும் என நீதிபதி ஆனந்த் வெங்கடசன் வலியுறுத்தினர்.

Related posts

கர்நாடக மாநிலத்தில் கடந்த 15 மாதங்களில் 1,182 விவசாயிகள் தற்கொலை

விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது..!

கேரளாவின் வயநாடு பகுதியில் மாற்றுமுறை மருத்துவத்திற்கு சென்றதால் 3 வயது சிறுவன் உயிரிழப்பு: தந்தை, சிகிச்சையளித்த நபர் கைது