தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு சரியாக உள்ளது… மேலும் மேம்படுத்த உழைப்பேன்: டிஜிபி சங்கர் ஜிவால் பேட்டி

சென்னை: தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு சரியாக உள்ளது. மேலும் மேம்படுத்த உழைப்பேன் என்று டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் சட்டம் – ஒழுங்கு புதிய டிஜிபியாக சங்கர் ஜிவால் பொறுப்பேற்றுக் கொண்டார். சங்கர் ஜிவால் உத்தராகண்ட் மாநிலம் அல்மோராவை பூர்வீகமாகக் கொண்டவர். புதிய டிஜிபியாக பொறுப்பேற்ற சங்கர் ஜிவாலிடம் பொறுப்புகளை சைலேந்திர பாபு ஒப்படைத்தார். தற்போதைய டிஜிபி சைலேந்திரபாபு ஓய்வு பெற்ற நிலையில் புதிய டிஜிபியாக சங்கர் ஜிவால் பதவியேற்றார். புதிய டி.ஜி.பி.யாக பொறுப்பேற்ற சங்கர் ஜிவாலுக்கு அணி வகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. டிஜிபியாக பொறுப்பேற்ற சங்கர் ஜிவால் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்; மக்களுக்கும் காவல்துறைக்கும் இடையே சுமுக நிலையை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.

டிஜிபியாக நியமனம் செய்த முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி. சாலை விபத்துகளை குறைக்க மேலும் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். காவலர்களின் நலன் கருதி சில திட்டங்களை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். ரவுடிகள், கள்ளச்சாராயத்திற்கு எதிரான நடவடிக்கை தொடரும். தமிழ்நாடு காவல்துறையில் புதிய திட்டங்கள் கொண்டு வரப்பட உள்ளன. காவல்துறையில் போதுமான காவலர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு சரியாக உள்ளது. மேலும் மேம்படுத்த உழைப்பேன். இவ்வாறு தெரிவித்தார்.

Related posts

வெளிநாடு செல்லும் அண்ணாமலை; தமிழக பாஜவை நிர்வகிக்க கமிட்டி அமைக்க திட்டம்: தேர்தலில் வேலை செய்யாதவர் பதவியை பறிக்க முடிவு

அதிமுக பகுதி செயலாளர் கொலை குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும்: எடப்பாடி வலியுறுத்தல்

மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: மர்ம நபருக்கு வலை