மறைந்த கவுன்சிலர்கள் இருவரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி: அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்

சென்னை: சென்னை மாநகராட்சியில், மறைந்த கவுன்சிலர்கள் இருவரின் குடும்பத்தினருக்கு குடும்ப பாதுகாப்பு நிதியாக தலா ரூ.3 லட்சத்துக்கான காசோலையை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார். சென்னை மாநகராட்சியில் உள்ள மாமன்ற உறுப்பினர்கள் மறைவிற்கு குடும்ப நிவாரண நிதியாக ரூ.1 லட்சம் வழங்கி வந்த நிலையில், சென்னை மாநகராட்சியின் இந்த ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை அறிவிப்பில், பொறுப்பில் உள்ள மாமன்ற உறுப்பினர்கள் மரணமடைந்தால், அவர்களது குடும்பத்திற்கு வழங்கப்படும் நிவாரண நிதி ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும், என மேயர் பிரியா அறிவித்தார்.

அதன்படி, சமீபத்தில் மறைந்த ஆலப்பாக்கம் கு.சண்முகம் மற்றும் க.சரஸ்வதி ஆகிய இரண்டு மாமன்ற உறுப்பினர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் குடும்ப பாதுகாப்பு நிதிக்கான காசோலைகள் வழங்கும் நிகழ்ச்சி, தலைமை செயலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில், அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு, மறைந்த இரண்டு மாமன்ற உறுப்பினர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார். நிகழ்ச்சியில், மேயர் பிரியா, துணை மேயர் மு.மகேஷ்குமார், சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை அரசு முதன்மை செயலாளர் தா.கார்த்திகேயன், மாமன்ற ஆளுங்கட்சி தலைவர் ராமலிங்கம், தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதிச்சேவை நிறுவன தலைவர் எஸ்.விஜயகுமார், நகராட்சி நிருவாக இயக்குநர் சிவராசு, கூடுதல் ஆணையர் ஆர்.லலிதா, துணை ஆணையர் ஷரண்யா அறி, மாமன்ற செயலாளர் மகேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

Related posts

பள்ளி குழந்தைகள் போல் மோதிக்கொள்ளும் இஸ்ரேல், ஈரான்: அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் விமர்சனம்

கீழடி ஊராட்சி தலைவருக்கு சு.வெங்கடேசன் வாழ்த்து..!!

காந்தி ஜெயந்தி.. டெல்லியில் மகாத்மா காந்தியின் நினைவிட ஜனாதிபதி, பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மரியாதை..!!