2024ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கு பரிந்துரைக்க செப்டம்பர் 15 கடைசி நாள்: ஒன்றிய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

புதுடெல்லி: 2024ம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகளை சமர்ப்பிக்க செப்டம்பர் 15ம் தேதி கடைசி நாள் என ஒன்றிய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கல்வி, இலக்கியம், கலை, விளையாட்டு, சமூகப்பணி, பொதுவிவகாரங்கள், அறிவியல், பொறியியல், வணிகம், தொழில், மருத்துவம் போன்ற பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு ஆண்டுதோறும் பத்ம, பத்ம விபூஷன், பத்ம பூஷன் ஆகிய விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. 2024ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகள் கடந்த மே 1ம் தேதி முதல் இணையம் வழியாக சமர்ப்பிக்கப்பட்டு வருகின்றன. இதற்கான கடைசி தேதி செப்டம்பர் 15ம் தேதி கடைசி நாளாகும் என ஒன்றிய உள்துறை அமைச்சம் தெரிவித்துள்ளது.

Related posts

கலைஞர் பற்றி அவதூறு: சீமான் மீது புகார்

“என்னை காண ஆதாருடன் வரவும்”- கங்கனா நிபந்தனை

இளைஞர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது