லஷ்கர் தீவிரவாதிகளின் சொத்துகள் முடக்கம்

ஸ்ரீநகர்: பாகிஸ்தான் தீவிரவாதி நவீத் ஜாட் மருத்துவ பரிசோதனைக்காக கடந்த 2018ம் ஆண்டு ஸ்ரீநகரில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அப்போது அங்கிருந்து நவீத் ஜாட் தப்புவதற்கு உதவியாக லஷ்கர் தீவிரவாதிகள் முகமது சாபி வானி, முகமது டிக்கா கான் ஆகியோர் போலீசார் மீது தாக்குதல் நடத்தினர். இதனை பயன்படுத்தி அவன் அங்கிருந்து தப்பினான். இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்து வரும் தேசிய புலனாய்வு அமைப்பு, சாபி வானியின் 5 சொத்துகள் மற்றும் டிக்கா கானின் 3 சொத்துகள் என மொத்தம் 8 சொத்துக்களை உபா சட்டத்தின் கீழ் முடக்கினர்.

Related posts

கீழ் மட்டம் முதல் மேல் மட்டம் வரை ஊழல்; புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமிக்கு எதிராக பாஜ எம்எல்ஏக்கள் கவர்னரிடம் திடீர் புகார்

கோவை ரயில் நிலையத்துக்கு வடமாநிலங்களில் இருந்து போதை பொருட்கள் கடத்தல்: 13 வாலிபர்கள் சிக்கினர்

திருச்சியில் செல்போன் பறித்து தப்பித்த திருடர்களை விரட்டி சென்ற போலீஸ்காரருக்கு வெட்டு: 3 பேர் சிக்கினர்