மொழி தான் ஒரு இனத்தின் வளர்ச்சிக்கு காரணம் முன்னாள் துணைவேந்தர் பேச்சு

 

காரைக்குடி, நவ.15: காரைக்குடி அருகே அமராவதிபுதூர் ராஜராஜன் சிபிஎஸ்இ பள்ளியில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு 247 மாணவர்கள் சேர்ந்து தமிழ்மொழியில் உள்ள 247 எழுத்துக்களையும் ஒரு நிமிடத்தில் கூறி தமிழ் மற்றும் 247 என்ற வடிவில் அமர்ந்து சாதனை முயற்சி நிகழ்ச்சி நடந்தது. பள்ளி முதல்வர் வடிவாம்பாள் வரவேற்றார். முன்னாள் துணைவேந்தர், கல்வி குழும ஆலோசகர் பேராசிரியர் முனைவர் சுப்பையா தலைமை வகித்து பேசுகையில், ஒரு இனத்தின் வளர்ச்சிக்கு காரணம் மொழி. தமிழ் இலக்கியங்களில் பலதரப்பட்ட கருத்துக்களை நமக்கு வழங்கியுள்ளது. ஒரு இனம் வாழ் மொழி, பண்பாடு, கலாச்சாரம் பாதுகாக்கப்பட வேண்டும். அந்த வகையில் இப்பள்ளியில் மாணவர்களுக்கு தமிழ் மொழி மீது ஆர்வம் வரவேண்டும் என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக குழந்தைகள் தினத்தை முன்னிட்டு இதுபோன்ற சாதனை முயற்சி மேற்கொண்டுள்ளது பாராட்டக்கூடியது.

பாடங்களை மட்டும் கற்றுக்கொடுப்பது கல்வி நிறுவனங்கள் அல்ல. சிறந்த அனுபவங்களை கற்றுக்கொடுக்க வேண்டும். திறமைகளை வெளிக்கொண்டு வர வாய்ப்புகளை கொடுக்க வேண்டும். சாதிக்க வேண்டும் என்பது மனம் சார்ந்தது. உங்களிடம் உள்ள தனித்திறமையை நம்ப வேண்டும். உங்கள் முயற்சிதான் வெற்றியை தரும். எந்த செயலையும் துணிச்சலுடன் செய்ய வேண்டும். எந்த செயலை செய்தாலும் நம்மை மகிழ்ச்சி படுத்தக்கூடிய எழுச்சி படுத்தக்கூடியதை செய்ய வேண்டும்.எதிர்மறையாக பேசுபவர்களுடன் பழக்கம் வைக்க கூடாது. வெற்றியாளர்களால் தான் வெற்றியாளரை உருவாக்க முடியும். எனவே உங்களை விட திறமையானவர்களுடன் பழக்கம் வைத்துக்கொள்ளுங்கள். எண்ணம் சிந்தனை உயர்வாக இருக்க வேண்டும். அறிவுதான் பலம் எல்லா செயலையும் நம்மால் செய்ய முடியும் என்ற சிந்தனையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை