நிலச்சரிவில் மாயமான கேரள லாரி ஆற்றின் 5 மீட்டர் ஆழத்தில் கண்டெடுப்பு: நீர் வரத்து அதிகரிப்பால் மீட்டெடுப்பதில் சிக்கல்

வடகனரா: நிலச்சரிவில் மாயமான கேரள லாரி, ஆற்றின் 5 மீட்டர் ஆழத்தில் இருப்பது தெரியவந்துள்ளது. நீர் வரத்து அதிகரிப்பால் மீட்டெடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வடகனரா மாவட்டம் அங்கோலா தாலுகா ஷிரூர் நிலச்சரிவு வழக்கில் காணாமல் போன கேரளா லாரி, சம்பவ இடத்திலிருந்து 60 மீட்டர் தொலைவிலும், ஆற்றில் 5 மீட்டர் ஆழத்திலும் இருக்க வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது. ஆனால் ஆற்று நீர் வரத்து அதிகமாக உள்ளதால், தற்போதைய நிலையில் சிரமமாக இருப்பதாக ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் இந்திரபாலன் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது. ஷிரூர் நிலச்சரிவு பகுதி மற்றும் கங்காவலி ஆற்றில் 3 இடங்களில் ராணுவம் மற்றும் கடற்படை வீரர்கள் உலோக பொருட்களை கண்டுபிடித்துள்ளனர். இதில், தண்டவாளம், செல்போன் டவர், லாரி, டேங்கர் கேபின் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில், அர்ஜுனின் லாரியை கண்டுபிடிக்க வேண்டும். சுமார் 60 மீட்டர் நீளம் மற்றும் 20 மீ்ட்டர் ஆழத்தில் ஒரு உலோகம் கண்டுபிடிக்கப்பட்டது.

இது லாரியின் கேபின் என தெரியவந்துள்ளது. லாரியில் 400 மரத்துண்டுகள் இருந்தன. ஆனால் 500 மீட்டர் தூரத்தில் மரத்துண்டுகள் காணப்பட்டதுடன் சில மரத்துண்டுகள் லாரியில் அடித்து செல்லப்பட்டன. தற்போது, ​​2 இடங்களில் லாரி எங்குள்ளது என்பது குறித்து ஆய்வு செய்யப்படுகிறது. மிக ஆழமான இடத்தில் இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்திடம் லாரி குறித்து பேசப்பட்டது.

நிறுவனத்தின் கூற்றுப்படி, மீதமுள்ள டிரக்குடன், ஒரு கேபினும் உள்ளது, அதற்குள் அர்ஜுன் இருக்க வாய்ப்புள்ளது. ஆனால் நதி நீர் அதிகமாக உள்ளதால், ஆழமான டைவர்ஸ்களுக்கு கூட அங்கு கண்டுபிடிப்பது மிகவும் கடினம். மாலுமிகளின் கூற்றுப்படி, ஆழமான டைவர்ஸ் அதிகபட்சம் 3 முடிச்சுகளில் செயல்பட முடியும். அதனால் ஆற்று நீர் வரத்து குறையும் வரை ஆழமான டைவர்ஸ் இயக்குவது கடினம். மழையின் அளவு குறைந்தால் இரவிலும் பணி மேற்கொள்ளப்படும் என்றார்.

 

Related posts

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம் அரிவாளால் வெட்டி மனைவி படுகொலை: கணவன் கைது, ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்

பருவமழையை சமாளிக்க ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை தயார்: மெட்ரோ நிர்வாகம் தகவல்

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது