நிலச்சரிவால் நிறுத்தப்பட்ட மலை ரயில் சேவை மீண்டும் துவக்கம்

மேட்டுப்பாளையம்: கோவை மாவடடம் மேட்டுப்பாளையம்- ஊட்டி இடையே மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் குன்னூர், ஊட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த செப்.29ம் தேதி இரவு கனமழை பெய்தது. இதன் காரணமாக, கல்லாறு- அடர்லி ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் மண் சரிந்தும், பாறாங்கற்கள் விழுந்தும் சேதமடைந்தது. நிலச்சரிவால், செப்.30ம் தேதி மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. தண்டவாள சீரமைப்பு பணிகள் நடைபெற்றதால் நேற்று முன்தினமும் சேவை ரத்தானது. சீரமைப்பு பணிகள் நிறைவு பெற்றதால் நேற்று மீண்டும் மலை ரயில் சேவை துவங்கியது. காலை 7.10 மணியளவில் 184 பயணிகள் மலை ரயிலில் உற்சாகமாக ஊட்டிக்கு பயணம் செய்தனர்.

Related posts

கதர் தொழிலுக்கு கை கொடுக்கும் வகையில் கதர், கிராம பொருட்களை அதிகளவில் வாங்கி நாட்டிற்கு வலிமை சேர்த்திட வேண்டும்: காந்தியடிகளின் பிறந்தநாளில் முதல்வர் வேண்டுகோள்

ராகுல்காந்திக்கு எதிராக பேசினால் நாடு தழுவிய போராட்டத்தை நடத்துவோம்: செல்வப்பெருந்தகை பேட்டி

கிராமப்புறங்களில் ரூ.500 கோடியில் 5,000 சிறு பாசன ஏரிகள் புனரமைப்பு: அரசாணை வெளியீடு