நிலங்கள் வழிகாட்டி மதிப்பை அரசு குறைக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை

சென்னை: நிலங்களின் வழிகாட்டி மதிப்பினை குறைக்க வேண்டும் என ஓ.பன்னீர் செல்வம் கோரிக்கை வைத்துள்ளார். இது தொடர்பாக ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக அரசு நிலங்களின் வழிகாட்டி மதிப்பு போன்று, வீடுகளுக்கு தெரு அடிப்படையில் மதிப்பு நிர்ணயிக்க முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

இது மக்கள் மீது கூடுதல் சுமையை திணிப்பதற்கான நடவடிக்கையே, ஏற்கெனவே வழிகாட்டி மதிப்பீடு மற்றும் பதிவுக் கட்டணங்களின் பல வகைகள், பல ரூபங்களில் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், மீண்டும் அதனை உயர்த்துவது கட்டுமானத் தொழிலை சீர்குலைப்பதோடு, ஏழை எளிய மக்களின் வீடு வாங்கும் கனவையும் சிதைத்துவிடும். தற்போதுள்ள சூழல், எந்தக் கட்டண உயர்வையும் தாங்கிக் கொள்ளும் நிலையில் மக்கள் இல்லை.

எனவே திமுக ஆட்சிப் பொறுப்பேற்றபோது இருந்த அளவுக்கு வழிகாட்டி மதிப்பு குறைக்கப்பட வேண்டும். பத்திரப்பதிவுத் துறையில் தற்போதுள்ள நடைமுறை தொடர வேண்டும் என முதல்வரை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடர்புடைய 12 இடங்களில் நடந்த சிபிசிஐடி சோதனை நிறைவு!

துரோகத்தின் மொத்த உருவமே அண்ணாமலைதான்: எடப்பாடி பழனிசாமி காட்டம்!

அரசியல் ஆதாயத்துக்காக கொலை நடந்ததற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை: கூடுதல் கமிஷனர் அஸ்ரா கார்க் பேட்டி