நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

புதுடெல்லி: நில அபகரிப்பு வழக்கில் எதிர் மனுதாரர்களான அதிமுகவின் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், அவரது மருமகனான நவீன்குமார், மகள் ஜெயப்பிரியா ஆகியோர் மூன்று வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சென்னை துரைப்பாக்கத்தில் மீன் வலை உற்பத்தி நிறுவனம் அமைந்துள்ள எட்டு கிரவுண்ட் நில உரிமை தொடர்பாக அதிமுகவின் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், அவரது மருமகனான நவீன்குமார் ஆகியோருக்கும், அவரது சகோதரர் மகேஷ் என்பவருக்கும் பிரச்சனை இருந்து வந்தது.

இதில் தனது செல்வாக்கை பயன்படுத்தி அடியாட்கள் மூலம் மிரட்டி நிலத்தை அபகரித்து கொண்டதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் ஜெயகுமாருக்கு எதிராக மகேஷ் புகார் அளித்திருந்தார். அதன்பேரில் ஜெயக்குமார், அவரது மகள் ஜெயபிரியா மற்றும் அவரது மருமகன் நவீன்குமார் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் டி.ஜெயக்குமார் மீதான இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து கடந்த ஆண்டு செப்டம்பர் உத்தரவிட்டது.

இதையடுத்து மேற்கண்ட உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு தரப்பு வழ்ககறிஞர் ஜோசப் அரிஸ்டாட்டில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஜெயக்குமார் உட்பட, அவரது மருமகனான நவீன்குமார், மகள் ஜெயப்பிரியா எதிர் தரப்பினர் அனைவரும் நான்கு வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் பிறப்பித்தது. இருப்பினும் இன்று(நேற்று) வரையில் எந்தவித பதில் மனுவும் தாக்கல் செய்யப்பட்டவில்லை.

இந்த நிலையில், மேற்கண்ட வழக்கானது நேற்று மீண்டும் விசாராணைக்கு வந்தபோது,ஜெயக்குமார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,”வழக்கை ஒத்திவைக்க கடிதம் கொடுக்கப்பட்டுள்ளதாக நீதிபதிகள் முன்னிலையில் தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி ஹெச்.ராய், ஒத்திவைப்பு கடிதத்தை ஏற்கிறோம். இருப்பினும் இந்த விவகாரம் தொடர்பாக டி.ஜெயக்குமார் உட்பட மூன்று வாரத்தில் எதிர் மனுதாரர்கள் அனைவரும் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை மூன்று வாரம் ஒத்திவைத்தார்.

Related posts

கைத்தறி நெசவாளர் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை: எம்எல்ஏ எழிலரசன் வழங்கினார்

மதுராந்தகத்தில் பாழடைந்த கட்டிடத்தில் வட்டார கல்வி அலுவலகம்: புதிதாக கட்டித்தர கோரிக்கை

சிறுமிக்கு பாலியல் தொல்லை