ஒரே வாரிசு என போலி ஆவணம் தயாரித்து ரூ.5 கோடி மதிப்புள்ள நிலம் மோசடி: தம்பதி கைது

பூந்தமல்லி, மார்ச். 12: சென்னை கீழ்கட்டளை எம்.கே. நகரை சேர்ந்த ரீத்து(39). இவர், ஆவடி காவல் ஆணையரகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவில் மார்ச் 5ம் தேதி புகார் மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது, எனது தந்தை ராமலிங்கம் என்பவர் அரசுத் துறையில் டெபுடி டைரக்டர் பணிபுரிந்து வந்துள்ளார். என்னுடன் பிறந்தவர்கள் ஜெயஸ்ரீ என்ற அக்காவும் ஷாலினி என்ற தங்கையும் உள்ளனர். மேலும், எனது தந்தை ஆவடி காந்திநகர் சி.டி.எச் சாலையில் அபார்ட்மெண்ட்யில் இரண்டு படுக்கை அறை கொண்ட இரண்டு வீடும், திருத்தணியில் 4,328 சதுர அடி கொண்ட காலிமனை மற்றும் ராமகிருஷ்ண புரத்தில் 7 ஏக்கர் விவசாய நிலமும் சொந்தமாக உள்ளது.

எனது தாயார் வத்சலா என்பவர் கடந்த 6.4.1996ம் ஆண்டு இறந்துவிட்டார். எனது தந்தை 12.5.2013ம் ஆண்டு பணி ஓய்வு பெறாத நிலையில் அதே ஆண்டில் தந்தையும் இறந்துவிட்டார். மேற்படி இடத்திற்கு அனைத்து அசல் ஆவணங்கள் மற்றும் பெற்றோரின் இறப்பு சான்று மற்றும் வாரிசு சான்று என அனைத்தும் எனது அக்கா ஜெயஸ்ரீ என்பவரிடம் இருந்ததாகவும் மேற்படி, சொத்துக்களை பிரித்து தர கேட்ட போது கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார்.

இதனால் சந்தேகப்பட்டு வில்லங்கசான்று போட்டு பார்த்தபோது தனது தந்தைக்கு ஒரே வாரிசு என மனுதாரரின் அக்கா ஜெயஸ்ரீ பெயரில் போலியான வாரிசு சான்று பெற்று, ஆவடியில் உள்ள 4,328 சதுரடிகள் உள்ள கடைகளை அவரது கணவர் யோகனந்தன் பெயருக்கு செட்டில்மென்ட் எழுதி வைத்ததுடன், அதனை தெரிந்து நான் கேட்டதற்கு அந்த செட்டில்மென்ட்டை ரத்து செய்வதாக மனுதாரரை அழைத்து சென்று மனுதாரரின் அக்கா ஜெயஸ்ரீ பெயருக்கு 4,328 சதுரடிகள் உள்ள கடைகளை மாற்றி கொண்டார்.

இதன் மதிப்பு சுமார் ரூ.5 கோடி ஆகும். எனவே, இந்த புகார் மீது நடவடிக்கை எடுத்து எனக்கு சேர வேண்டிய சொத்துகளை பெற்று தர வேண்டும் என அதில் கூறியிருந்தார். அதன் அடிப்படையில், விசாரணை செய்து மேலும் தலைமறைவாக இருந்த திருமங்கலத்தை சேர்ந்த ஜெயஸ்ரீ மற்றும் கணவர் யோகனந்தன்ஆகிய இருவரையும் நேற்று கைது செய்தனர்.

Related posts

வங்காளதேசத்தை சேர்ந்த கணைய புற்றுநோயாளிக்கு எண்டோஸ்கோபிக் அல்ட்ராசவுண்டில் மஞ்சள் காமாலைக்கு நவீன சிகிச்சை

திருப்போரூர் பேரூராட்சிக்கு நிரந்தர செயல் அலுவலர் நியமிப்பது எப்போது? பொதுமக்கள் எதிர்ப்பார்ப்பு

கூடுவாஞ்சேரி அருகே ஏகலைவா உண்டு உறைவிட பள்ளிக்கு ரூ.5.25 கோடியில் மாணவிகள் விடுதிக்கு கூடுதல் கட்டிடம்: ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ஆய்வு