எடப்பாடி உதவியாளர், எம்.சி.சம்பத் மருமகன் தொடர்பான விழுப்புரம் நில பத்திர பதிவு விவகாரத்தில் அமலாக்கத்துறையை சேர்க்க வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வானூர் கிராமத்தில் 4 ஏக்கர் நிலத்தை பத்திரப்பதிவு செய்வதில் பிரச்சினை ஏற்பட்டது. இந்த நிலத்திற்கு பத்திரப்பதிவு பிரச்னை வந்ததால் அந்த நிலத்தை வாங்க உள்ள டி.சி.இளங்கோவன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ராமன்லால் ஆஜராகி, மனுதாரர் முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத்தின் மருமகன், இவர் நவீன் பாலாஜி, மாணிக்கவேல் ஆகியோரிடம் இருந்து நிலத்தை விற்பனை செய்பவர்களுக்கு ₹24 கோடி மற்றும் ₹12 கோடி கடன் கொடுத்ததாக வேலு, பொன்ராஜா ஆகியோர் கூறுகின்றனர். கார்த்திகேயன், ராம்ராஜ் ஆகியோரும் கடன் கொடுத்ததாக கூறுகின்றனர்.

இந்த 4 பேரும், இந்த நிலத்தை பத்திரப்பதிவு செய்யக்கூடாது. இதில், கார்த்திகேயன், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமின் உதவியாளர். அரசியல் பின்புலம் கொண்ட இந்த விவகாரத்தில் ஏராளமான பிரச்சினை உள்ளன. புகார்கள் வந்ததால், சார் பதிவாளர் நிலத்தின் பத்திரப்பதிவை மேற்கொள்ள மறுத்து விட்டார். அதனால், மனுதாரர் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார் என்று கூறினார்.

இதை கேட்ட நீதிபதி கடனாக ₹24 கோடி கொடுத்தோம், ரூ.12 கோடி கொடுத்தோம் என்று இந்த புகார்தாரர்கள் கூறியுள்ளனர். இவ்வளவு பெரிய தொகைக்கு வருமான வரிக்கணக்கு காட்டப்பட்டதா என்பது தெரியவில்லை. அதனால், இந்த வழக்கில் வருமான வரித்துறையையும், மத்திய அமலாக்கப் பிரிவையும் எதிர்மனுதாரர்களாக சேர்க்கிறேன். அதுமட்டுல்ல புகார் கொடுத்துள்ள கார்த்திகேயன் உட்பட 4 பேரையும் எதிர் மனுதாரர்களாக சேர்க்கிறேன். இவர்கள் அனைவரும் பதில் மனு தாக்கல் செய்யும்படி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடுகிறேன் என்று கூறியுள்ளார்.

Related posts

பிரதமர் மோடிக்கு எதிராக மாநிலங்களவையில் காங்கிரஸ் சார்பில் உரிமை மீறல் நோட்டீஸ்..!!

காலநிலை மாற்ற ஆய்வு : ஒன்றிய அரசு பதில் தர ஆணை

அரசு, தனியார் ஆம்னி பேருந்துகளை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கும்படி உத்தரவிட ஐகோர்ட் மறுப்பு