நில அபகரிப்பு வழக்கில் அதிமுகவை சேர்ந்த முன்னாள் ஊராட்சி தலைவி அமுதாவுக்கு ஜாமின்

டெல்லி: நில அபகரிப்பு வழக்கில் அதிமுகவை சேர்ந்த முன்னாள் சேரன்குளம் ஊராட்சி தலைவி அமுதாவுக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியது. மன்னார்குடியில் ஞானம்மாள், ரொஸ்லினின் ரூ.20 கோடி நிலத்தை போலி ஆவணம் தயாரித்து மோசடி செய்துள்ளார். ஆள்மாறாட்டம் செய்து ரூ.20 கோடி மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ரோஸ்லின் புகார் அளித்திருந்தார். இதனை தொடர்ந்து திருவாரூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் கடந்த பிப்.15-ல் அமுதா சரணடைந்தார். சரணடைந்த நிலையில் ஜாமின் கோரி அமுதா உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

Related posts

கடலூர் ஆலை காலனி பகுதியைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி வெட்டிக் கொலை!

தமிழ்நாட்டில் 12 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை!

கீழ் மட்டம் முதல் மேல் மட்டம் வரை ஊழல்; புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமிக்கு எதிராக பாஜ எம்எல்ஏக்கள் கவர்னரிடம் திடீர் புகார்