ரூ.2 கோடி மதிப்புள்ள நில மோசடி வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை..!!

சென்னை: ரூ.2 கோடி மதிப்புள்ள நில மோசடி வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை அண்ணாநகரை சேர்ந்த பச்சையப்பன், வ/72, த/பெ.சின்னசாமி என்பவருக்கு சொந்தமான போருரை அடுத்து செட்டியார் அகரத்திலுள்ள ரூ.2 கோடி மதிப்புள்ள சுமார் 1.10 ஏக்கர் நிலத்தை தனது அக்காள் லட்சுமி மற்றும் அவரது மகன் இளம்பரிதி த/பெ.மணி ஆகியோர் கூட்டாக சேர்ந்து போலியான உயில் சாசனத்தை எழுதி அதில் தனது அப்பாவின் கையெழுத்தை போலியாக போட்டு கமலகண்ணன் என்பருக்கு கிரையம் செய்து மோசடி செய்ததாகவும், இது குறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவில் கடந்த 2008-ம் வருடம் மேற்படி பச்சையப்பன் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இவ்வழக்கு தொடர்பாக, சென்னை, எழும்பூர், CCB அண்டு CBCID நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், நீதிமன்ற வழக்கு விசாரணை முடிவடைந்து இவ்வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளி இளம்பரிதி மீதான குற்றம் நிருபிக்கப்பட்டதால், குற்றவாளி இளம்பரிதிக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து கனம் எழும்பூர் CCB அண்டு CBCID நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு வழங்கினார். இவ்வழக்கில் தொடர்புடைய லட்சுமி ஏற்கனவே இறந்து விட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக செல்வராஜ் என்பவர் ஆஜராகி சிறப்பாக வாதாடினார். மேற்படி வழக்கில் சிறப்பாக புலனாய்வு செய்து, நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தி குற்றவாளிக்கு உரிய தண்டனை பெற்று தந்த மத்திய குற்றப்பிரிவு, நிலமோசடி விசாரணை பிரிவு -2 காவல் ஆய்வாளர் மற்றும் நீதிமன்ற அலுவல் பணிபுரியும் காவல் குழுவினரை உயரதிகாரிகள் வெகுவாகப் பாராட்டினர்.

 

Related posts

கீழ் மட்டம் முதல் மேல் மட்டம் வரை ஊழல்; புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமிக்கு எதிராக பாஜ எம்எல்ஏக்கள் கவர்னரிடம் திடீர் புகார்

கோவை ரயில் நிலையத்துக்கு வடமாநிலங்களில் இருந்து போதை பொருட்கள் கடத்தல்: 13 வாலிபர்கள் சிக்கினர்

திருச்சியில் செல்போன் பறித்து தப்பித்த திருடர்களை விரட்டி சென்ற போலீஸ்காரருக்கு வெட்டு: 3 பேர் சிக்கினர்