நில ஆக்கிரமிப்பு நோட்டீஸ்: வட்டாட்சியர் ஐகோர்ட் கிளையில் ஆஜர்

மதுரை: அரசு நிலம் ஆக்கிரமிப்பு விவகாரத்தில் ஊராட்சி தலைவர், வட்டார வளர்ச்சி அலுவலர் நோட்டீஸ் அனுப்பியது ஏன்? என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. அரசு நிலம் ஆக்கிரமிப்பை அகற்ற வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நோட்டீஸ் வழங்க அதிகாரம் கொடுத்தது யார்?. எந்த பிரிவின் கீழ் நோட்டீஸ் அனுப்பப்பட்டது? என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். அரசு ஆக்கிரமிப்பை அகற்றும் விதிகள் சட்டத்தை வருவாய்த் துறையினர் முறையாக பின்பற்ற ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் தாயில்பட்டியை சேர்ந்த கண்ணுச்சாமி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

Related posts

ஏரியில் குளிக்க சென்ற 4 சிறுவர்கள் மூழ்கி பலி

உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கிய தமிழக பக்தர்கள் 17 பேர் சிதம்பரம் வந்தடைந்தனர்: 13 பேர் இன்று சென்னை வருகை

குஜராத்தில் ஒரு டோல்கேட் கூட அமைக்காத ஒன்றிய பாஜ அரசு தமிழகத்தில் 67 டோல்கேட் அமைத்தது ஏன்? அதிமுக கேள்வி