வேலைக்கு நிலம் ஊழல் வழக்கு அமலாக்கத்துறை முன்பு லாலு பிரசாத் ஆஜர்

பாட்னா: ரயில்வே வேலைக்கு நிலம் வாங்கியது தொடர்பான வழக்கில் லாலு பிரசாத் யாதவ், பாட்னாவில் உள்ள அமலாக்க இயக்குநரக அலுவலகத்தில் ஆஜரானார். ரயில்வே அமைச்சராக லாலுபிரசாத் இருந்த போது வேலைக்கு நிலம் வாங்கி ஊழல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன் அடிப்படையில் லாலுபிரசாத், அவரது மகன் தேஜஸ்வி ஆகியோருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. லாலுவிடம் விசாரிக்க டெல்லியில் இருந்து அதிகாரிகள் பீகாரில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகம் வந்தனர். அவர்கள் முன்பு ஆஜராக லாலுபிரசாத் தனது மகள் மிசா பாரதியுடன் காலை 11.05 மணியளவில் பாட்னாவில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தை அடைந்தார். அங்கு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இன்று தேஜஸ்வி யாதவ் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

Related posts

கூகுள் மேப்பை நம்பி ஆற்றுக்குள் காரை விட்ட இளைஞர்கள்.

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்!

தீபாவளியையொட்டி அக்டோபர் 29ம் தேதிக்கு; முக்கிய ரயில்கள் அனைத்திலும் 5 நிமிடத்தில் புக்கிங் முடிந்தது: தென் மாவட்ட ரயில்கள் ஹவுஸ்புல்