லாலு உட்பட 9 பேருக்கு சிபிஐ நீதிமன்றம் ஜாமீன்

புதுடெல்லி: ரயில்வேயின் மேற்கு மத்திய மண்டலத்தில் குரூப்-டி பணிகளுக்கு பல்வேறு நபர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களை பணியமர்த்த அப்போதைய ரயில்வே அமைச்சரான லாலுவும் அவரது குடும்பத்தினரும் நிலங்களை லஞ்சமாகப் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறைவழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. மேற்கண்ட வழக்கானது டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது முந்தைய உத்தரவின் அடிப்படையில் லாலு பிரசாத் யாதவ், தேஜஸ்வி யாதவ், தேஜ் பிரதாப் யாதவ் ஆகியோர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர். இதையடுத்து இந்த வழக்கில் தொடர்புடைய லாலு பிரசாத் யாதவ் உட்பட மொத்தம் ஒன்பது பேருக்கும் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

Related posts

கைத்தறி நெசவாளர் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை: எம்எல்ஏ எழிலரசன் வழங்கினார்

மதுராந்தகத்தில் பாழடைந்த கட்டிடத்தில் வட்டார கல்வி அலுவலகம்: புதிதாக கட்டித்தர கோரிக்கை

சிறுமிக்கு பாலியல் தொல்லை