மேலக்கோட்டையூர் ஏரியில் செத்து மிதக்கும் மீன்களால் நோய் பரவும் அபாயம்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

திருக்கழுக்குன்றம்: மேலக்கோட்டையூர் ஏரியில் செத்து மிதக்கும் மீன்களால் நோய் பரவும் அபாயம் ஏற்படுள்ளத. எனவே, இறந்த மிதக்கும் மீன்களை அகற்றி நோய் பரவுதை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மேலக்கோட்டையூர் ஊராட்சி பகுதியில் பெரிய ஏரி உள்ளது. சென்னையின் வளர்ந்து வரும் புறநகராக கருதப்படுகின்ற மேலக்கோட்டையூர் பகுதியில் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகர்ப்புறங்களை சேர்ந்த முக்கிய அரசியல் வாதிகள், அதிகாரிகள், தொழிலதிபர்கள் என பல தரப்பினர் இங்கு குடியேறி வருகின்றனர். மேலும், தமிழ்நாடு காவலர் குடியிருப்பும் இங்கு கட்டப்பட்டுள்ளது.

இந்த, காவலர் குடியிருப்பு மட்டுமின்றி, அங்குள்ளவர்கள் தங்களது வீட்டின் கழிவுகளை அருகிலுள்ள பெரிய ஏரியில் விடுகின்றனர். இதனால், ஏரியில் துர்நாற்றம் வீசி வந்த நிலையில், கடந்த சில தினங்களாக ஏரியில் செத்து மிதக்கும் மீன்களால் தற்போது கூடுதல் துர்நாற்றம் வீசுவதால், அப்பகுதியில் செல்பவர்கள் மூக்கை பிடித்தவாறே செல்ல வேண்டியுள்ளது.மேலும், இந்த ஏரியையொட்டி ஊராட்சிக்கு சொந்தமான 3 குடிநீர் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த, கிணற்று நீரைத்தான் ஊராட்சியில் உள்ள பொதுமக்கள் உபயோகிப்பதால் வாந்தி, போதி ஏற்படுவதுடன், ஏரியில் கழிவுநீர் கலப்பதால் மீன்கள் ஏரியில் செத்து மிதக்கிறது, குடிநீர் கிணறும் மாசுபடுகிறது. எனவே, அப்பகுதி மக்களின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்குகின்ற ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

மத்திய கிழக்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றது

2025-ல் நவீன வசதிகளுடன் கூடிய 500 மின்சார தாழ்தள பேருந்துகள் மக்கள் பயன்பாட்டுக்கு வரும்: அமைச்சர் சிவசங்கர்

விஜயகரிசல்குளம் அகழாய்வில் சங்கு வளையல் கண்டெடுப்பு