உழைப்பு, விசுவாசத்திற்கு அங்கீகாரம் இல்லை பாஜ துணை தலைவர் கட்சியில் இருந்தே விலகல்

திருச்சி: திருச்சி மாவட்ட பாஜ துணைத்தலைவர் ஜெயகர்ணா, தலைமைக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் எனது தனிப்பட்ட காரணங்களுக்காகவும், வேலை பளுவின் காரணமாகவும் தொடர்ந்து கட்சியில் பணியாற்ற முடியாத காரணத்தால் ஆக.3, 2024 முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும், திருச்சி மாவட்ட துணைத்தலைவர் பதவியில் இருந்தும் நான் முழுமையாக விலகிக்கொள்கிறேன். எனக்கும், பாஜவுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்பதை தெரிவித்து கொள்கிறேன். சொந்த காரணங்களுக்காக பதவி விலகினால் கூட, விலகும் இந்நேரத்தில் ஒரு கருத்தை பதிவு செய்ய விரும்புகிறேன்.

என்னுடைய உழைப்புக்கும், விசுவாசத்திற்கும் சரியான அங்கீகாரம் பாஜவில் கிடைக்கவில்லை என்ற உணர்வுடன் பிரிந்து செல்கிறேன். கட்சியில் இருக்கும் காலத்தில் கட்சி வளர வேண்டும் என்ற உணர்வில் வேலை செய்வதோடு இல்லாமல், எந்நேரமும் ஒரு பதட்டத்திலும், சந்தேகத்திலும், நெஞ்சில் ஒரு இறுக்கத்துடன் வேலை செய்ய முற்பட்டது. அந்த பதட்டமும், சந்தேக எண்ணமும், கட்சி ஊசல் பயத்திலும் இருந்து இந்த கட்சி விலகினால், தொண்டர்கள் இன்னும் வீரியத்தோடு வேலை செய்ய வருங்காலங்களில் ஏதுவாக இருக்கும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

கர்நாடகாவில் பாஜக எம்.எல்.ஏ. முனிரத்னா மீது பாலியல் வழக்குப்பதிவு

அத்வானி மதுரை வருகையின் போது வெடிகுண்டு வைக்க திட்டமிட்டதாக கைதான ஷாகிர் சிறையில் தற்கொலை முயற்சி

கும்பகோணத்தில் ஓடும் பேருந்தில் நடத்துநர் மீது தாக்குதல் நடத்திய 3 இளைஞர்கள் கைது: சிசிடிவி காட்சிகளைக் கொண்டு போலீசார் நடவடிக்கை