தொழிலாளர் தினத்தன்று அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டங்களை நடத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை: மே 1-ம் தேதி கிராம சபை கூட்டங்களை நடத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது குடியரசு நாள் (ஜனவரி 26ம் தேதி), தொழிலாளர் நாள் (மே 1ம் தேதி), சுதந்திர தினம் (ஆகஸ்ட் 15), காந்தி ஜெயந்தி (அக்டோபர் 2), உலக நீர் நாள் (மார்ச் (22), உள்ளாட்சி நாள் (நவம்பர் 1) என ஆண்டுக்கு 6 முறை கிராம சபை கூட்டம் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, வருகிற மே 1ம் தேதி தொழிலாளர் தினத்தை ஒட்டி அனைத்து கிராமங்களிலும் கிராம சபை கூட்டம் நடத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

ஒவ்வொரு கிராமங்களிலும் அன்றைய தினம் நடைபெறும் கூட்டத்தில், பொதுமக்கள் தங்கள் குறைகளை சொல்ல வசதி ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது.ஊராட்சி எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையை பின்பற்றி மே 1-ம் தேதி காலை 11 மணிக்கு கூட்டம் நடத்த வேண்டும் எனவும் தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது. மேலும் கிராம சபைக் கூட்டங்கள் மதச்சார்புள்ள எந்தவொரு வளாகத்திலும் நடந்திடக்கூடாது என்றும், கிராம சபை கூட்டங்கள் நடைபெறும் இடத்தை முன்கூட்டியே ஊரக பொதுமக்களுக்கு தெரியப்படுத்திட வேண்டும் என்றும் தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.கூட்டத்தில் பிளாஸ்டிக் பை பயன்பாட்டை முற்றிலும் தவிர்ப்பது தொடர்பாக விவாதிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.

Related posts

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; விழுப்புரம் மாவட்டத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்!

காற்று மாசுவால் ஆண்டுதோறும் 10 நகரங்களில் 30 ஆயிரம் பேர் பலி: டெல்லியில் 12,000 பேர் உயிரிழப்பு

திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த தடையில்லை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு