மனைவி பிரசவத்திற்காக தாய் வீட்டுக்கு சென்ற நிலையில் அண்ணன் மகளை கர்ப்பமாக்கிய தொழிலாளிக்கு சரமாரி அடி, உதை

திருமலை: மனைவி பிரசவத்திற்காக தாய் வீட்டுக்கு சென்ற நிலையில் தனது அண்ணன் மகளான 16 வயது சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய தொழிலாளியை அப்பகுதி மக்கள் மின்கம்பத்தில் கட்டி வைத்து சரமாரியாக அடித்து, உதைத்தனர். அவரை போலீசார கைது செய்தனர். ஆந்திர மாநிலம், சித் தூர் அருகே உள்ள நீலகுண் டா கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜூ (33), கூலித்தொழிலாளி. இவர்களுக்கு ஒரு குழந்தை இருந்த நிலையில் அவரது மனைவி மீண்டும் கர்ப்பமானார். இதனால் அவர் பிரசவத்திற்காக தனது குழந்தையுடன் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு தாய் வீட்டிற்கு சென்றார். நாகராஜூ தனது கிராமத்திலேயே தங்கி வேலை செய்து வந்தார்.

அப்போது அவரது அண்ணன் மகளான 16 வயது சிறுமி பள்ளிக்கு சென்று வந்தார். அவரை பள்ளிக்கு அடிக்கடி அழைத்து சென்று வந்தார். ஒருநாள் தின்பண்டங்கள் வாங்கி கொடுத்து தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். வீட்டுக்கு சென்றபிறகு சிறுமியை அவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் இதை யாரிடமாவது கூறினால், உனது பெற்றோரை கொன்று விடுவேன் எனவும் மிரட்டியுள்ளார். இதனால், பயந்து போன சிறுமி யாரிடமும் சொல்லவில்லை. இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு நாகராஜூ சிறுமியிடம் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்நிலையில், சிறுமியின் உடலில் மாற்றம் ஏற்பட்டதை அறிந்த அவரது பெற்றோர் நேற்று மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அங்கு நடந்த பரிசோதனையில், சிறுமி 8 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர் சிறுமியிடம் விசாரித்தனர். அவர்களிடம் சிறுமி நடந்த சம்பவத்தை கூறி கதறி அழுதார். இதனால் ஆத்திரமடைந்த சிறுமியின் பெற்றோர் மற்றும் அப்பகுதி மக்கள், நாகராஜூவை நேற்று பிடித்து அங்குள்ள மின்கம்பத்தில் கட்டி ைவத்து கட்டையால் சரமாரியாக தாக்கினர். இதுகுறித்து தகவலறிந்த பலமநேர் போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் பொதுமக்களிடம் சமாதானம் பேசி நாகராஜூவை மீட்டு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு விசாரணை நடத்திய போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

Related posts

விக்கிரவாண்டி தொகுதி அடங்கிய விழுப்புரம் மாவட்டத்தில் திமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள்: தமிழ்நாடு அரசு பெருமிதம்: 16,128 பேருக்கு ரூ.24.43 கோடி சுய உதவிக்குழு கடன் ரத்து

தமிழ்நாட்டில் 5 நாட்கள் மிதமான மழை பெய்யும்

சட்டம்-ஒழுங்கை பராமரிப்பதே முதல் பணி ரவுடிகளுக்கு அவர்கள் மொழியில் சொல்லிக்கொடுப்போம்: புதிதாக பொறுப்பேற்ற சென்னை போலீஸ் கமிஷனர் அருண் எச்சரிக்கை