ஆட்சியை இழக்கிறார் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்?.. 100-க்கும் மேற்பட்ட இடங்களில் தொழிலாளர் கட்சி முன்னிலை

லண்டன்: பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் தொழிலாளர் கட்சி 125 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இங்கிலாந்தில் இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சி ஆட்சி செய்து வருகிறது. சுனக் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி 25 வரை உள்ள நிலையில், முன்கூட்டியே பொதுத்தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதன்படி 650 தொகுதிகளை கொண்ட பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. இதில் ஆட்சி அமைக்க 326 இடங்கள் தேவை.

இந்நிலையில் இன்று காலை வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அதில்; பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் தொழிலாளர் கட்சி 125 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. ஆளும் கன்சர்வேடிவ் கட்சி 16 இடங்களில் மட்டும் முன்னிலை பெற்றுள்ளது. பிரிட்டனில் ஆட்சியை கைப்பற்ற 326 இடங்கள் தேவை என்ற நிலையில் தொழிலாளர் கட்சி முன்னிலை பெற்றுள்ளது. 15 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள கன்சர்வேட்டிவ் கட்சி இம்முறை பின்னடைவை சந்தித்து வருகிறது.

Related posts

மக்களுக்கு சேவையாற்றுவோரை கவுரவிக்கும் வகையில் விஜயகாந்த், ஜி.விஸ்வநாதன் உள்ளிட்ட 9 பேருக்கு விருது: எஸ்டிபிஐ கட்சி அறிவிப்பு

பாடப்புத்தகத்தில் நாகப்ப படையாட்சியின் வரலாறு இடம்பெற நடவடிக்கை எடுக்க கோரிக்கை

அன்புமணி கோரிக்கை ஆன்லைன் சூதாட்டத்திற்கு அரசு தடை பெற வேண்டும்