சிதம்பரத்தில் எல்.இளையபெருமாள் நூற்றாண்டு நினைவரங்கம் அமைக்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: சிதம்பரத்தில் எல்.இளையபெருமாள் நூற்றாண்டு நினைவரங்கம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். பட்டியலின மக்களின் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்ட தலைவர் இளைய பெருமாள் தொடர்பாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது; எல்.இளையபெருமாள் முயற்சியினால்தான் இரட்டை பானை முறை சிதம்பரம் பகுதியில் முடிவுக்கு வந்தது. மிக பெரிய சமூக போராட்டங்களை நடத்தியவர் எல்.இளையபெருமாள். பட்டியலின மக்களுக்காக பல போராட்டங்களை நடத்தியவர் எல்.இளையபெருமாள். காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து இளம்வயதில் நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். 3 முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராகவும் இருந்தவர் பெரியவர் இளையபெருமாள்.

தீண்டாமை எதிர்ப்பு போராட்டங்களை இளையபெருமாள் பட்டியல் போட்டு சொன்னதை கேட்டு அண்ணல் அவர்களே வியப்படைந்தார். வன்கொடுமை தடுப்பு சட்டத்துக்கு அடித்தளமே பெரியவர் இளைபெருமாளின் அறிக்கைதான். அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பது செல்லும் என்று இளையபெருமாள் அறிக்கையை சுட்டிக்காட்டி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. பெரியவர் இளையபெருமாள் வழியில் சுயமரியாதை சமதர்ம சமுதாயத்தை அமைப்போம். சமூக போராளியை போற்றுவதை திராவிட மாடல் அரசு தனது கடமையாக கருதுகிறது. தீண்டாமையை ஒழிக்க சாதி அமைப்பின் ஆணிவேரை வெட்ட வேண்டும். சிதம்பரத்தில் இளையபெருமாளுக்கு நூற்றாண்டு நினைவரங்கம் அமைக்கப்படும் என்று கூறினார்.

Related posts

கீழ் மட்டம் முதல் மேல் மட்டம் வரை ஊழல்; புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமிக்கு எதிராக பாஜ எம்எல்ஏக்கள் கவர்னரிடம் திடீர் புகார்

கோவை ரயில் நிலையத்துக்கு வடமாநிலங்களில் இருந்து போதை பொருட்கள் கடத்தல்: 13 வாலிபர்கள் சிக்கினர்

திருச்சியில் செல்போன் பறித்து தப்பித்த திருடர்களை விரட்டி சென்ற போலீஸ்காரருக்கு வெட்டு: 3 பேர் சிக்கினர்