கைலி, காக்கி சட்டை அணிந்து ஆர்டிஓ, பேரூராட்சி ஆபீசில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் ரெய்டு: ரூ.2.24 லட்சம் பறிமுதல்

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மோட்டார் வாகன ஆய்வாளர் (நிலை 1) அலுவலகத்தில் சிவகங்கை லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். அங்கு பீரோ மற்றும் பைல்களில் இருந்த கணக்கில் வராத ரூ.90 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக மோட்டார் வாகன ஆய்வாளர் சித்ரா உள்பட அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினர். மேலும், அலுவலக வாகனம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் சோதனை நடத்தினர். காலை 10 மணிக்கு தொடங்கி மாலை வரை சோதனை நீடித்தது. இதில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

இதேபோல், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேரூராட்சி அலுவலகத்திற்று லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி பீட்டர் பால்துரை தலைமையில் இன்ஸ்பெக்டர் அனிதா மற்றும் போலீசார், கைலி மற்றும் காக்கி சட்டை அணிந்து டிரைவர் போல மாறுவேடத்தில் நேற்று வந்தனர். அங்கு ஊழியர்களின் பணி விவரங்களை கேட்டபடி சென்ற லஞ்ச ஒழிப்புத்துறையினர், அதிரடியாக அலுவலக கதவை பூட்டி அனைவரது செல்போன்களையும் வாங்கிக் கொண்டனர். பின்னர் ஒவ்வொரு அறையாக சோதனை நடத்தினர். அப்போது பேரூராட்சி செயல் அலுவலரிடம் ரூ.1.09 லட்சம் மற்றும் டிரைவரிடம் இருந்து ரூ.25,500 என ரூ.1 லட்சத்து 34 ஆயிரத்து 500ஐ பறிமுதல் செய்தனர்.

Related posts

‘’ஆசைக்கு இணங்க மறுத்ததால் கோபம்’’- மனைவியை பிளேடால் கிழித்துவிட்டு தப்பிவிட்ட முதியவருக்கு வலைவீச்சு

யோகாவில் கின்னஸ் சாதனை: சிறுவர்களுக்கு வாழ்த்து

கோவையில் இருந்து கூடுதல் பேருந்துகள் இயக்கம்..!!