கே.வி.குப்பம் வார சந்தையில் ஆடுகள் வரத்து அதிகரித்து விற்பனை அமோகம்

*வியாபாரிகள் மகிழ்ச்சி

கே.வி.குப்பம் : கே.வி.குப்பத்தில் நேற்று நடந்த வாரச்சந்தையில் ஆடுகள் அமோகமாக விற்பனையானது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.வேலூர் மாவட்டம், கே.வி.குப்பத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை ஆட்டுசந்தை நடைபெறுவது வழக்கம். மாவட்டத்தின் பிரபலமான சந்தைகளுள் ஒன்றான இந்த ஆட்டுச்சந்தைக்கு ஆடுகளை வாங்கவும், விற்கவும் பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள், பொது மக்கள் வருவார்கள்.

இந்நிலையில் திங்கட்கிழமையான நேற்று வழக்கம் போல் ஆட்டுசந்தை கே.வி.குப்பம் சந்தைமேட்டில் கூடியது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், அண்டை மாநிலமான கர்நாடகா, ஆந்திரா எல்லையோர பகுதிகளில் இருந்தும் சுமார் 300க்கும் மேற்பட்ட ஆடுகள் கொண்டு வரப்பட்டது. சந்தையில் ஆடுகள் வரத்து அதிகமாக இருந்தது. இதில் விவசாயிகள் மேய்ச்சலுக்கா அதிகளவில் ஆடுகளை வாங்கி சென்றனர். நேற்று நடந்த சந்தையில் வெள்ளாடுகளின் ரகம் அதிகளவில் காணப்பட்டது. இதில் குட்டி ஆடுகள் அதிகளவு விற்பனையானது.

ஒரு ஆட்டுக்குட்டியின் விலை அதிகபட்சமாக ₹7 ஆயிரம் வரையும், பெரிய ஆட்டின் விலை ₹28 ஆயிரம் வரையும் விற்பனையானது. இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘நேற்று நடந்த சந்தையில் மேய்ச்சலுக்கா அதிகளவில் ஆடுகளை வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டினர்.இன்னும் இரு வாரங்களுக்கு பின் கிருஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு, பொங்கல் பண்டிகை வர இருப்பதால் ஆடுகளின் வரத்தும், விற்பனையும் அதிகரிக்கும்’ என்றனர்.

Related posts

கடையின் பூட்டை உடைத்து செல்போன் கொள்ளை

குறைவான வரி செலுத்தி மோசடி: ஆம்னி பேருந்து பறிமுதல்

முன்னாள் திமுக பொறுப்பு குழு உறுப்பினர் இல்ல திருமண விழா: மணமக்களை வாழ்த்திய ஆவடி சா.மு.நாசர் எம்எல்ஏ