கேரளா: குவைத்துக்கு தான் செல்ல ஒன்றிய அரசு அனுமதி அளிக்காதது துரதிருஷ்டம் என கேரள அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் கேரளத்தைச் சேர்ந்தவர்கள். தீ விபத்தில் காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் கேரளாவைச் சேர்ந்தவர்கள். தீ விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெறுவோருக்கு உதவுவதற்காக குவைத் செல்ல இருந்த தனக்கு அனுமதி தரவில்லை என்றும் அவர் வருத்தம் தெரிவித்தார்.