குன்றத்தூர் ஒன்றியத்தில் ரேஷன் கடை, அங்கன்வாடிக்கு ரூ.3.27 கோடியில் புதிய கட்டிடம்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் திறந்தார்

குன்றத்தூர்: காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட திருமுடிவாக்கம், கொல்லச்சேரி, சிக்கராயபுரம், கோவூர், சிறுகளத்தூர் உள்பட 14 ஊராட்சிகளில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, ரூ.3.27 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட ரேஷன் கடை, அங்கன்வாடி மையம் உள்பட பல்வேறு மக்கள் பயன்பாட்டு கட்டிடங்கள் திறப்புவிழா நேற்று மாலை திருமுடிவாக்கம் அருகே வழுதலம்பேடு கிராமத்தில் நடைபெற்றது. அமைச்சர் தா.மோ.அன்பரசன் பங்கேற்று, ரூ.3.27 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட கட்டிடங்களை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.

அப்போது அவர் பேசுகையில், தமிழகத்தில் பெண்களுக்கு மாதந்தோறும் கலைஞர் உரிமைத்தொகை திட்டத்தின்கீழ் ரூ.1000 வழங்கப்படுகிறது. இதேபோல் தமிழகத்தில் நிறைவேற்றப்பட்டு வரும் பல்வேறு மக்கள்நலத் திட்டங்களை பிற மாநில அரசியல் கட்சிகளும் பின்பற்றி வருகின்றன. குறிப்பாக, கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், தற்போதைய தமிழக அரசின் பல்வேறு திட்டங்கள் தொடர்பான வாக்குறுதிகளை கூறித்தான் அங்கு காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது என்று தெரிவித்தார்.

இதில் ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை, மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயகுமார், மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் படப்பை மனோகரன், குன்றத்தூர் ஒன்றியக் குழு தலைவர் சரஸ்வதி மனோகரன், ஊராட்சி மன்ற தலைவர்கள் மணி, உமா சத்தியமூர்த்தி, சுமதி வைத்தீஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

தமிழகம் முழுவதும் 99 சதவீத காவல்நிலையங்களில் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளது: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

கட்சி நிர்வாகிக்கு கொலை மிரட்டல்; பாஜ மாவட்ட தலைவர் மீது வழக்கு

புழல் சிறையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.40 கோடி மெத்தாம்பெட்டமைன் ₹1.5 கோடி ரொக்கம் பறிமுதல்: 9 பேர் அதிரடி கைது