குன்றத்தூர் முருகன் கோயிலில் 6 ஜோடிகளுக்கு இலவச திருமணம்

பல்லாவரம்: முதலமைச்சரின் சட்டமன்ற அறிவிப்பு 2024-2025ன்படி ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் கோயில்களில் இலவச திருமணம் நடத்தும் விழா, இந்து சமய அறநிலையத்துறை சார்பில், குன்றத்தூர் முருகன் கோயிலில் நேற்று நடந்தது. இதில், 6 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நேற்று நடைபெற்றது. பின்னர், திருமணம் செய்து கொண்ட 6 ஜோடிகளுக்கும் தலா 4 கிராம் தங்கம், கட்டில், பீரோ மெத்தை உள்ளிட்ட சீர்வரிசை பொருட்கள் என ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் வழங்கப்பட்டது. கோயில் நிர்வாகம் சார்பில் நடைபெற்ற இவ்விழாவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தாமரைக்கண்ணன், குன்றத்தூர் நகர் மன்ற தலைவர் சத்தியமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டு இலவச திருமணங்களை நடத்தி வைத்து, மணமக்களுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கினர். நிகழ்ச்சியில் அறங்காவலர்கள் சரவணன், குணசேகரன், ஜெயக்குமார், சங்கீதா கார்த்திக், கோயில் செயல் அலுவலர் ஸ்ரீகன்யா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related posts

சட்டப்பேரவை குழு விருதுநகரில் இன்று ஆய்வு

நரிக்குடி அருகே ரேஷன் பொருட்கள் வாங்க கண்மாய் நீரை கடந்து செல்லும் கிராமமக்கள்: ஊரில் புதிய கடை திறக்கப்படுமா?

சிவகாசியில் மாநில அளவிலான கராத்தே போட்டி