குன்றத்தூர் அருகே சாலையின் குறுக்கே அமைத்திருந்த தடுப்பு கம்பியில் சிக்கிய ஆட்டோ

குன்றத்தூர்: குன்றத்தூர் அருகே தரப்பாக்கம் பகுதியில், தாம்பரம்-மதுரவாயல் புறவழிச்சாலை சர்வீஸ் சாலையில் நேற்று மாலை போரூரில் இருந்து பொருட்களை ஏற்றி கொண்டு ஒரு சரக்கு ஆட்டோ வந்து கொண்டிருந்தது. 2ம் கட்டளை அருகே சென்றபோது, கனரக வாகனங்கள் செல்வதை தடுக்கும் வகையில், சாலையின் குறுக்கே அமைக்கப்பட்டு இருந்த பெரிய இரும்பு தடுப்பு கம்பியை கவனிக்காமல் டிரைவர் சென்றார். இதில், சரக்கு ஆட்டோ சிக்கியது. முன்பக்க கண்ணாடியை உடைத்தபடி குத்தியபடி அந்தரத்தில் ஆட்டோ தொங்கியது.

டிரைவர் படுகாயத்துடன் அலறி சத்தம் போட்டார். அவ்வழியாக வந்தவர்கள் அவரை மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விரைந்து வந்து கிரேன் உதவியுடன் சரக்கு ஆட்டோவை மீட்டு போக்குவரத்தை சீரமைத்தனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பு நிலவியது.

Related posts

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!

மருதாநதி, குண்டேரிப்பள்ளம் நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவு

வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில் 339 ரன்களை குவித்தது இந்தியா