கும்மிடிப்பூண்டியில் யோகாசன போட்டிகள் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு: எம்எல்ஏ வழங்கினார்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டியில் 4வது ஆண்டு தென்னிந்திய அளவிலான யோகாசன போட்டிகள் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் தனியார் யோகா பயிற்சி மையம் சார்பில் 4வது தென்னிந்திய அளவிலான யோகாசன போட்டிகள் நேற்று முன்தினம் நடந்தது. இந்த போட்டியை எழும்பூர் வட்டாட்சியார் நித்யாநந்தம், தமிழ்நாடு யோகா கமிட்டி மற்றும் நோவா உலக சாதனையின் நிர்வாக ஆசிரியர் ராஜ்குமார் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர். இதில் 4 மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 800க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

இதில், பெண்கள் பிரிவில் சென்னையைச் சேர்ந்த பள்ளி மாணவி ஹேமபிரியா (11) முதல் பரிசையும், ஹாசினி (9) 2ம் பரிசையும் வென்றனர். இதேபோல், ஆண்கள் பிரிவில் நடைபெற்ற போட்டியில் லலித் சாய் (11) முதல் பரிசையும், சித்தேஷ் (10) 2ம் பரிசையும் வென்றனர். இந்த போட்டியில் வென்ற மாணவ மாணவியர்களுக்கு கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ. கோவிந்தராஜன், புது கும்மிடிப்பூண்டி ஒருங்கிணைப்பாளர் சுகுமாரன், ஒன்றிய கவுன்சிலர்கள் சீனிவாசன், மதன் மோகன் ஆகியோர் கோப்பைகள் மற்றும் பதக்கங்களை வழங்கினர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை