கும்மிடிப்பூண்டியில் பொதுநிகழ்ச்சியில் பங்கேற்க காதல் தம்பதிக்கு தடை

பொன்னேரி: கும்மிடிப்பூண்டியில் காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதிகள் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கும்மிடிப்பூண்டி அருகே சுண்ணாம்புகுளம் கிராமம், புதுத்தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (31). இவரது மனைவி மோகனப்பிரியா. இவர்கள் இருவரும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டனர். தற்போது இவர்கள், அதே தெருவில் தங்களது 2 குழந்தைகளுடன் வசிக்கின்றனர். இவர்கள் காதல் திருமணம் செய்ததால், சுண்ணாம்புகுளம் பகுதியில் நடைபெறும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க கிராம நிர்வாகிகள் தடை விதித்தனர். மேலும், கோயில் மற்றும் பொது நிகழ்ச்சிகளுக்கு இத்தம்பதி வழங்கும் நன்கொடைகளை ஏற்க மறுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்றுமுன்தினம் பொன்னேரி சப்-கலெக்டர் ஐஸ்வர்யா ராமநாதனை சந்தித்து மனு வழங்கினர். அதில் கூறியிருந்ததாவது, எங்களை சுண்ணாம்புகுளம் கிராமத்தின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க அனுமதி வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தனர். இதை பெற்றுக்கொண்ட சப்-கலெக்டர், விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

Related posts

வரதட்சணை கொடுமை வழக்கில் 7 ஆண்டு சிறை..!!

ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை நான் எதிர்நோக்குகிறேன்.! பிரிட்டனின் புதிய பிரதமராக வெற்றி பெற்றுள்ள கீர் ஸ்டார்மர்க்கு பிரதமர் மோடி வாழ்த்து

டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் தமிழகம் முழுவதும் செப்டம்பர் மாதம் அமல்