கும்பகோணம் அருகே இளங்கார்குடியில் கரும்பாயிரம் கொண்ட அய்யனார் கோயிலில் ஆயிரக்கணக்கான வவ்வால்கள் சூழ்ந்துள்ளது-வவ்வால்களை பாதுகாக்க கோரிக்கை

கும்பகோணம் : கும்பகோணம் அருகே இளங்கார்குடி கிராமத்தில் ஆயிரக்கணக்கான வவ்வால்கள் சூழ்ந்த வண்ணம் உள்ள 100 ஆண்டுகள் பழமையுடன் காட்சியளிக்கும் கரும்பாயிரம் கொண்ட அய்யனார் கோயில் உள்ளது.தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், கபிஸ்தலம் அருகே உள்ள இளங்கார்குடி கிராமத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள சுமார் 100 ஆண்டுகளுக்கு மேல் பழைமையான கரும்பாயிரம் கொண்ட அய்யனார் கோயில்.

ஒரு காலத்தில் இந்தக்கோயிலின் வழியாக கரும்பு ஏற்றி செல்லும் போது, கரும்பாயிரம் அய்யனார் சிறு பிள்ளையாக மாறி சாப்பிடுவதற்கு கரும்பு கேட்டதாகவும், கரும்பு ஏற்றிச் சென்றவர் அதை தர மறுத்ததால், ஆயிரம் கரும்புகளை பேய்க்கரும்பாக மாற்றிய வரலாறு உள்ளதாகவும், காவிரி கரையின் அருகில் அமைந்துள்ள இந்த கரும்பாயிரம் கொண்ட அய்யனார் கோயிலில், சாமி காலத்தில் இருந்து சுமார் 100 ஆண்டுகளாக வவ்வால்கள் சூழ்ந்து காட்சி அளிப்பதால், வவ்வால் கோயில் என்றும் பக்தர்களால் அழைக்கப்பட்டு வருவதாகவும், மேலும் இளங்கார்குடி கிராமத்தின் எல்லையில் பாம்பு சத்தியம் செய்து கொடுத்ததாக ஒரு ஐதீகம் இருப்பதால் இந்த கிராமத்தை பொறுத்தவரை இதுவரை பாம்பு கடித்து யாரும் உயிர் இழந்ததில்லை எனவும், அதுபோல இந்த கோயிலின் அருகில் வவ்வால்கள் அதிகம் காணப்படுவதால், கோயிலை சுற்றி பொதுமக்கள் யாரும் வெடிகள் கூட வெடிப்பதில்லை என்றும் இந்தக் கோயிலின் சிறப்பை கூறுகின்றனர். இந்நிலையில் இந்த கோயிலை சுற்றி உள்ள மரங்களில் ஆயிரக்கணக்கான வவ்வால்கள் மரத்தில் தங்கிக்கொண்டு உள்ளன. இந்த வவ்வால்களை பாதுகாக்க அரசு தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்களும், கிராம மக்களும், கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

கீழ் மட்டம் முதல் மேல் மட்டம் வரை ஊழல்; புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமிக்கு எதிராக பாஜ எம்எல்ஏக்கள் கவர்னரிடம் திடீர் புகார்

கோவை ரயில் நிலையத்துக்கு வடமாநிலங்களில் இருந்து போதை பொருட்கள் கடத்தல்: 13 வாலிபர்கள் சிக்கினர்

திருச்சியில் செல்போன் பறித்து தப்பித்த திருடர்களை விரட்டி சென்ற போலீஸ்காரருக்கு வெட்டு: 3 பேர் சிக்கினர்