கும்பக்கரை அருவியில் 2வது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிப்பு

தேனி: கும்பக்கரை அருவியில் 2வது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கும்பக்கரை அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கும்பக்கரை அருவி வனத்துறையினர் இருந்து வருகிறது. கும்பக்கரை அருவியில் நீராடி மகிழ தேனி மாவட்டம் மட்டுமின்றி தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலத்தில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.

இந்நிலையில் தமிழ்நாட்டில் கடந்த ஒருவாரமாக பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தேனி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் கும்பக்கரை அருவியிலும் நேற்று முதல் அதிகளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக கும்பக்கரை அருவியில் 2ஆவது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். மேலும் கும்பக்கரை ஆற்றுப்பகுதியில் உள்ள கிராம மக்கள் ஆற்றை கடக்கவோ, ஆற்றில் குளிக்கவோ வேண்டாம் என வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

திருச்சூரில் இருந்து வந்த ஏடிஎம் கொள்ளையர்கள் வெப்படை அருகே பிடிபட்ட பரபரப்பு காட்சி வெளியானது!

மராட்டிய சட்டப்பேரவைக்கு நவம்பர் மாதம் 26-ம் தேதிக்குள் தேர்தல்!

கொடைக்கானலில் தடையை மீறி டிஜே நிகழ்ச்சி; தனியார் விடுதியின் அரங்கத்துக்கு சீல்!