கும்பக்கரை அருவியில் 10-வது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை

தேனி: கும்பக்கரை அருவியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீர் கொட்டுவதால் 10-வது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவி அமைந்துள்ளது.

இந்த அருவிக்கு பெரியகுளம் மேற்குத்தொடர்ச்சி மலை, கொடைக்கானல், வட்டக்கானல் மற்றும் பாம்பாறு பகுதியில் பெய்யும் மழை காரணமாக நீர்வரத்து இருக்கும். கடந்த 10 நாட்களாக பெரியகுளம், மேற்குத்தொடர்ச்சி மலை, கொடைக்கானல் பகுதிகளில் பெரிய கனமழை காரணமாக கும்பக்கரை அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்கவோ, சுற்றிபார்க்கவோ அனுமதியில்லை என தடை விதித்திருந்தனர். கடந்த 12ம் தேதியிலிருந்து கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தடை தொடரும் என வனத்திரையினர் அறிவித்துள்ளனர்.

மேலும் அப்பகுதியில் பெய்து வரும் கனமழை குறைந்து வெள்ளப்பெருக்கு சீராகும் வரை சுற்றுலாப் பயணிகள் கும்பக்கரை அருவிக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஏரியில் குளிக்க சென்ற 4 சிறுவர்கள் மூழ்கி பலி

உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கிய தமிழக பக்தர்கள் 17 பேர் சிதம்பரம் வந்தடைந்தனர்: 13 பேர் இன்று சென்னை வருகை

குஜராத்தில் ஒரு டோல்கேட் கூட அமைக்காத ஒன்றிய பாஜ அரசு தமிழகத்தில் 67 டோல்கேட் அமைத்தது ஏன்? அதிமுக கேள்வி