குமரி மாவட்டம் சிற்றார் அருகே மீண்டும் புகுந்தது புலி; 4 ஆடுகளை கடித்துக் கொன்றதால் மக்கள் அச்சம்..!!

குமரி: கன்னியாகுமரி மாவட்டம் சிற்றார் அருகே சிலோன் காலனி தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் மீண்டும் புகுந்த புலி 4 ஆடுகளை கடித்து கொன்றிருக்கிறது. கன்னியாகுமரி மாவட்டம் சிற்றார் சிலோன் காலனி அருகே அரசு ரப்பர் தோட்ட குடியிருப்பு பகுதியில் கடந்த 5ம் தேதி ஆடு ஒன்றை புலி தாக்கியதை கண்டு வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து வனத்துறையினர் பல்வேறு விசாரணையை மேற்கொண்டனர்.

கடந்த 9ம் தேதி சுரேஷ் குமார் என்பவருக்கு சொந்தமான பசுமாட்டையும், புலி தாக்கி காயப்படுத்தியது. இதனால் அச்சமடைந்த பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்து தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதை தொடர்ந்து பல்வேறு பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு புலி நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர்.

இருப்பினும் கண்காணிப்பு கேமராவில் புலியின் நடமாட்டம் கிடைக்கவில்லை. இதனிடையே பாதுகாப்பு கோரி தொழிலாளர்கள் ஏற்கனவே போராட்டம் நடத்தினர். இருப்பினும் புலியின் தாக்குதல் தொடர்ந்து அதிகரித்து வந்தது. இந்நிலையில் புலியானது நான்கு ஆடுகளை கடித்துக் கொன்றுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.

Related posts

ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று வேலைநிறுத்தம்: வரும் 5ம் தேதி போராட்டம் நடத்த முடிவு

சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!

அடையாளம் தெரியாத வாகனம் மோதி இருவர் பலி