குமரி மாவட்டம் தோவாளை மலர்ச்சந்தையில் பிச்சிப்பூ 4 மடங்கு விலை உயர்ந்து ரூ.2,000-க்கு விற்பனை..!!

குமரி: குமரி மாவட்டம் தோவாளை மலர்ச்சந்தையில் பிச்சிப்பூவின் விலை 4 மடங்காக உயர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள புகழ் வாய்ந்த மலர் சந்தை கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள தோவாளை மலர் சந்தை ஆகும். அங்கு ஓசூர், பெங்களூரு, மதுரை உள்ளிட்ட இடங்களில் இருந்தும் மற்றும் உள்ளூர் பகுதிகளில் இருந்து பூக்களின் வரத்து அதிகளவில் வரும்.

அதேபோல் தமிழ்நாடு மற்றும் கேரளாவிற்கு தோவாளை மலர் சந்தையில் இருந்து பூக்கள் ஏற்றுமதி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கோடை வெப்பம் காரணமாக பிச்சிப்பூ செடியிலேயே கருகி விடுவதால் தோவாளை மலர் சந்தைக்கு பிச்சிப் பூக்களின் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. குறிப்பாக குமரி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பிச்சிப்பூக்கு பெயர் பெற்ற குமாரபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பிச்சிப்பூவின் சாகுபடி வெகுவாக குறைந்துள்ளது.

இதன் காரணமாக தோவாளை மலர்ச்சந்தையில் பிச்சிப்பூவின் விலை 4 மடங்காக அதிகரித்துள்ளது. மேலும், சுப தினங்கள் தொடர்ந்து வருவதால் பிச்சிப்பூவின் தேவையும் அதிகரித்துள்ளதால் விலையும் அதிகரித்துள்ளது. மேலும், ஒரு கிலோ பிச்சிப்பூ ரூ.500-க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று 4 மடங்கு விலை உயர்ந்து ரூ.2,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் மல்லிகை பூ, அரளி, முல்லை போன்ற பிற பூக்களின் விலை சராசரியாகவே இருந்து வருகிறது.

 

Related posts

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நாளை மறுநாள் பிரசாரம் ஓய்வு: அமைச்சர் உதயநிதி 2 நாள் பிரசாரம்

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு